லுடுவிக் ஃவான் பேத்தோவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லூடுவிக் ஃவான் பேத்தோவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லூடுவிக் ஃவான் பேத்தோவன்(Ludwig van Beethoven') (பி.1770, இ. மார்ச் 26, 1827) அவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் ஜெர்மனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். இவர் பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசை நடத்துநராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃவனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் மிகவும் புகழ் பெற்றதாகும். சுமார் 1801 ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.

இவர் 1792ல் மேற்கத்திய இசைக்குப் புகழ் பெற்ற வியன்னா நகருக்குச் சென்று அங்கு வாழத் தொடங்கினார். இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. இவர் கடைசியில் வியன்னா நகரிலேயே 1827ல் இறந்தார்.

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:பிறப்பு மற்றும் இளமைக்காலம்[தொகு]

யோகன் பீத்தோவன் மற்றும் மரியா மாக்டலேன் கவேரிச் ஆகியாரின் மகனாராக 1770ஆம் ஆண்டில் பான் என்னும் ஊரில் பிறந்தார் லூடுவிக் வான் பீத்தோவன். லூடுவிக்கின் தந்தை யோகன் பீத்தோவன் ஒரு இசைகலைஞர் மற்றும் இசை ஆசிரியராவார். லூடுவிக்கின் முதல் இசை ஆசிரியர் அவருடைய தந்தை யோகன் தான். பிள்ளை பருவத்திலேயே இசை கற்ற தொடங்கினார் லூடுவிக். யோகன் மிக கண்டிப்பான ஆசிரியராக திகழ்ந்தவர். அச்சிறு வயதிலேயே லூடுவிக்கின் இசை திறமை வெளிப்பட தொடங்கியது. தந்தையிடன் இசை கற்றபோதே பிற இசைகலைஞர்களிடமும் இசை கற்றார் லூடுவிக். கில்லாசு ஃவான் ஈடென், தோபியாசு பிடெட்ரிச் ஃபெய்ஃபர் (பியானோ), பிரான்சு ரோவண்டினி (வயலின் மற்றும் வியோலா) போன்றோரிடமும் இசை கற்றுக்கொண்டார் இளம் லூடுவிக். லூடுவிக்கை தன் இசை வாரிசாக நிறுவ முனைந்த தந்தை யோகன் லூடுவிக்கின் ஆறாம் அகவையில் (1778ல்) அவருடைய முதல் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

பின்னர் 1779ல் லுடுவிக் தனது வாழ்வின் முக்கியமான ஆசிரியரான கிறிஸ்டியன் கோட்லாப் நீஃப்பிடம் இசையமைத்தல் பற்றி கற்கத் தொடங்கினார். நீஃப்பிடம் இசை எழுத கற்றதோடு அவருடைய உதவியுடன் தனது முதல் இசை படைப்பை 1783ல் வெளியிட்டார் லூடுவிக். 1784 முதல் நீஃப்பின் துணை இசைக்கலைஞராக அரசவை இசைக்குழுவில் பணியாற்றத் தொடங்கினார். 1783ல் லூடுவிக் தனது முதல் மூன்று பியானோ சொனாட்டாகளை மாக்சுமிலியன் பெடரிக் என்பவருக்காக உரித்தாக்கினார். லூடுவிக்கின் இசை திறமையினால் ஈர்க்கப்பட்டு, அவரின் இசை கல்விக்காக கொடையளித்தார் மாக்சுமில்லியன். மொசார்டுடன் இணைத்து இசை கற்பதற்காக 1787 மார்ச் மாதம் வியன்னா சென்றார். அவர்களுடை நட்பு குறித்து தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. தன் தாயாரின் மறைவு காரணமாக உடனேயே அவர் பான் திரும்பினார். தந்தையும் நோயுற்ற காரணத்தினால், குடும்ப சுமை லூடுவிக் மீது விழுந்தது.

காது கேளாமை[தொகு]

1796 ஆம் ஆண்டு பீத்தோவனின் 26 ஆம் வயதில் அவருக்கு காது கேளாமை ஆரம்பித்தது. கேட்கும் திறனை அவர் சிறிது சிறிதாக இழக்கத் தொடங்கினார்.

காதிரைச்சல் நோயால் அவர் தீவிரமாக பாதிக்கப்பட்டு கொண்டிருந்தார்.ஒரு விதமான இரைச்சல் அவர் காதில் ஒலித்துக்கொண்டே இருந்ததால் அவரால் இசையை கேட்க முடியாமல் போனது. காதில் வலி ஏற்படுவதால் அவர் பேசுவதைக்கூட குறைத்துக்கொண்டார்.

என்ன காரணத்தினால் அவருக்கு காதுகேளாமை வந்ததென்று கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் அவருக்கு டைபஸ் நோய் இருந்தது என்று மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் அவருக்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவும் பழக்கம் இருந்தது எனவும், அதனால் இந்நோய் ஏற்பட்டிருக்கும் என்றும் மருத்துவர்கள் கருதினார்கள். ஆனால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் உட்காதுகளில் இருந்த நாள்பட்ட புண்களே செவிட்டுத்தன்மைக்கு காரணம் என்று கூறியது.

1801 வாக்கில் தனது காதின் நிலை பற்றி விளக்கி தன் நண்பர்களுக்கு கடிதங்கள் அனுப்பினார் பீத்தோவன்.சில நெருங்கிய நண்பர்கள் செவிட்டுத்தன்மை பற்றி ஏற்கனவே அறிந்திருந்தனர். பின் மருத்துவரின் ஆலோசனைபடி வியன்னாவுக்கு அருகில் உள்ள சிறிய ஆஸ்திரிய கிராமமான ஹெலிசாட்டில் வசித்து வந்தார். அவர் அங்கு 1802 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை வசித்து வந்தார்.

ஹெலிசாட்டில் இருந்தபோது பீத்தோவன் தன் தமயனுக்கு ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி இருந்தார். அதில் அவர் செவிட்டுத்தன்மையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளலாம் எனும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடேன் என்று கூறீருந்தாராம்.

இறுதியில் அவரால் எதையுமே கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. தனது ஒன்பதாம் ஒத்தினி இசையை வாசிக்கும் பொழுது , அவ்விசை அவர் காதுகளிளேயெ விழவில்லையாம். பார்வையாளர்கள் ஆர்ப்பரிப்பதும், கைத்தட்டல் ஓசைகளும் கூட அவர் காதுகளில் விழவில்லையாம். சுற்றி பார்த்துதான் அவர்கள் கைதட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டாராம் பீத்தோவன்.அதன் பின் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பதை நிறுத்திக் கொண்டாராம் பீத்தோவன்.அவரின் ஏராளமான காது கேட்கும் கருவிகள் தற்போது ஜெர்மனியின் , போன் என்னும் நகரில் உள்ள பீத்தோவனின் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.(பீத்தோவனின் பிறந்த வீடே தற்போது பீத்தோவனின் அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது).

செவிட்டுத்தன்மை காரணமாக பீத்தோவன் உரையாடல்களை நோட்டுபுத்தகத்த்ல் நிகழ்த்த தொடங்கினார்.அவரின் நண்பர்கள் சொல்லவிரும்புவதை உரையாடல் கையேட்டில் எழுதுவார்கள். அதற்கு பீத்தோவன் வாய் மொழியாகவோ, அல்லது எழுத்து மூலியமாகவோ பதில் அளிப்பார்.இவ்வாறு பீத்தோவன் 400 உரையாடல் கையேடுகளை வைத்திருந்தார்.அதில் 264 கையேடுகள் அவரின் இறப்பின் பின் அழிக்கப்பட்டன.மீதம் உள்ளவற்றையும் சில மாறுதல்களை செய்து மக்களின் காட்சிக்கு வைத்துள்ளனர்.

இறப்பு[தொகு]

பேத்தோவன் தனது மீதமுள்ள மாதங்களில் பெரும்பாலான நாட்கள் படுக்கையிலேயே இருந்தார். அவர் ஒரு இடியுடன் கூடிய மழை நாளில், தனது 56 ஆம் வயதில் மார்ச் 26,1827 அன்று கல்லீரல் பாதிப்பு காரணமாக மரணமடைந்தார்.அவரின் பிரேத பரிசோதனையில் அதிக மது அருந்துதல் காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.பீத்தோவனின் இறுதி ஊர்வலத்தில் வியன்னாவின் குடிமக்கள் 20,000 பேர் கலந்து கொண்டனராம்.


பீத்தோவனின் இசைகள்[தொகு]

பீத்தோவனின் மூன்று உலக புகழ் பெற்ற இசைகள்.

மேலும் காண்க[தொகு]