லுட்விக் பிராண்டில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லுட்விக் பிராண்டில் | |
|---|---|
Ludwig Prandtl |
|
| பிறப்பு | பெப்ரவரி 4, 1875 |
| பிறப்பிடம் | ஃப்ரெய்சிங், ஜெர்மனி |
| இறப்பு | ஆகத்து 15 1953 (அகவை 78) |
| இறப்பிடம் | கோட்டிஞ்சென், ஜெர்மனி |
| வாழிடம் | ஜெர்மனி |
| தேசியம் | ஜெர்மானியர் |
| துறை | காற்றியக்கவியல் |
| பணி நிறுவனம் | கோட்டிஞ்சென் பல்கலைக்கழகம் Technical School in Hannover |
| கல்வி கற்ற இடங்கள் | Technical University of Munich |
| ஆய்வு நெறியாளர் | August Föppl |
| குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
Ackeret, Heinrich Blasius, Busemann, Nikuradse, Pohlhausen, Schlichting, Tietjens, Tollmien, von Kármán, and many others (85 in total). |
| அறியப்படுவது | எல்லைப்படலம் பிராண்டில் எண் |
லுட்விக் பிராண்டில் (Ludwig Prandtl, பிப்ரவரி 4, 1875 - ஆகத்து 15, 1953) என்பவர் யெர்மானிய அறிவியலாளராவார். அவர் படிப்படியான கணிதவியற் பகுப்பாய்வு முறைகளில் நிபுணராவார், அக்கணிதமுறைகளை காற்றியக்கவியல் சார்ந்த ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினார். அவர் உருவாக்கிய கணித மாதிரிகளே வானூர்திப் பொறியியலின் அடிப்படைத் தத்துவங்களாக அறியப்படுகின்றன. 1920-களில் அவர் குறையொலிவேக மற்றும் ஒலியொத்தவேக காற்றியக்கவியலுக்கான அடிப்படையான கணிதவியல் பகுப்பாய்வு முறைகளைக் கண்டறிந்து மேம்படுத்தினார். எல்லைப்படலம், மெல்லிய-காற்றிதழ், மற்றும் ஏற்றுவரிக் கோட்பாடு ஆகியவை அவரது பங்களிப்புகளில் மிக முக்கியமானவை ஆகும். பிராண்டில் எண் என்பது அவரது பெயரால் வழங்கப்பெறும் பரிமாணமற்ற எண்ணாகும். இவரே, நவீன காற்றியக்கவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
இவரது நூல்கள்[தொகு]
- Paul Peter Ewald, Theodor Pöschl, Ludwig Prandtl; authorized translation by J. Dougall and W.M. Deans The Physics of Solids and Fluids: With Recent Developments Blackie and Son (1930).
- Ludwig Prandtl, Essentials of Fluid Dynamics, Hafner Publications, New York (1952).