லீலா சாம்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லீலா சாம்சன்
பிறப்பு 1951 (அகவை 62–63) [1]
குன்னூர், தமிழ்நாடு
பணி இயக்குனர் கலாசேத்திரா (2005- )
தலைவர் சங்கீத நாடக அகாதெமி (2010- )
நடனம், நடன வடிவமைப்பு, பயிற்சியாளர்

லீலா சாம்சன் (Leela Samson, பிறப்பு 1951) ஓர் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர், நடன வடிவமைப்பாளர், பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர். தனது கலைநுட்பத்திறனுக்கு பெயர்பெற்ற லீலா தில்லியில் உள்ள ஸ்ரீராம் பரதநாட்டிய பலா கேந்திரத்தில் பல ஆண்டுகள் கற்பித்து வந்தார்;[2] தற்போது ருக்மிணி தேவி அருண்டேல் நிறுவிய கலாசேத்திராவின் இயக்குனராகவும் (ஏப்ரல் 2005), இந்தியாவின் இசை,நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதெமியான சங்கீத நாடக அகாதெமியின் தலைவராகவும் (2010- ) பணியாற்றி வருகிறார்.[3] கலாசேத்திராவின் இவர் பதவிவகிப்பது தொடர்பாக இவர் தகுதியற்ற முறையில் உள்நோக்கத்துடன் இப்பதவியை அடைந்தார் என சர்ச்சைகள் எழுந்தன. [4]2011ஆம் ஆண்டு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவராக சர்மிளா தாக்கூரை அடுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.[5]

இளமையும் கல்வியும்[தொகு]

லீலா தமிழ் நாட்டிலுள்ள குன்னூரில் பிறந்தவர் கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றபின்னர் கலாசேத்திராவில் பரதநாட்டியம் பயின்றார்.[6][7]

பணிவாழ்வு[தொகு]

விருதுகள்[தொகு]

லீலா சாம்சனுக்கு பரதநாட்டியத்திற்கு ஆற்றிய பணிக்காக பத்மசிறீ (1990),[8] தமிழ்நாடு அரசின் நிருத்திய சூடாமணி, கலைமாமணி (2005) [9] மற்றும் சங்கீத நாடக அகாதெமியின் விருது (1999–2000) [10] எனப் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவரது எழுத்துப் படைப்புகள்[தொகு]

  • Samson, Leela (1987). Rhythm in Joy: Classical Indian Dance Traditions. New Delhi: Lustre Press.
  • Samson, Leela (2010). Rukmini Devi: A Life, Delhi: Penguin Books, India, ISBN 0670082643.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ak என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Borders no Bar". Indian Express. Jun 13 2009. http://www.indianexpress.com/news/Borders-no-Bar/475804/. 
  3. "Leela Samson takes over as Kalakshetra director". தி இந்து. Apr 18, 2005. http://www.hindu.com/2005/04/18/stories/2005041812230500.htm. 
  4. http://www.dailypioneer.com/todays-newspaper/leelas-kala-as-kalakshetra-director-questioned.html
  5. [1]
  6. Noted students of Kalakshetra
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; cct என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. "Padma Awards". Ministry of Communications and Information Technology.
  9. Kalaimamani Awards for 123 persons announced The Hindu, Feb 15, 2006.
  10. "SNA: List of Akademi Awardees". Sangeet Natak Akademi Official website.
  11. www.outlookindia.com - Books

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லீலா_சாம்சன்&oldid=1618997" இருந்து மீள்விக்கப்பட்டது