லிமரைக்கூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லிமரைக்கூ என்பது மூன்று வரிகள் கொண்ட கவிதையில் முதல்வரியிலும், மூன்றாவது வரியிலும் இயைபுத் தொடையுடன் அமையும் குறும்பா ஆகும்[1]. ஆங்கில மொழியில் ஹைக்கூ மற்றும் லிமரிக் வடிவங்களையும் இணைத்து ஒரு கலப்பு இனக் குறும்பா கண்டுபிடிக்கப் பட்டது. முதன்முதலில் இதை உருவாக்கியவர் டெட் பாக்கர் (Ted Pauker) என்னும் கவிஞர். இவர் தம் கலப்பு இனக் குறும்பாவுக்கு லிமரைக்கூ(லிமரிக்+ஹைக்கூ) என்று பெயரிட்டார்.

இவ்வகைக் குறும்பாக்களைத் தமிழில் படைத்து, 138 பாக்களைத் தொகுத்து, ‘சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள்’ என்ற பெயரில் ஈரோடு தமிழன்பன், வெளியிட்டிருக்கிறார்.

ஊது வத்திச் சின்னம்
கட்சி வென்று கோட்டை பிடித்தும்
நாற்றம் போகலை இன்னும்

ஆதாரங்கள்[தொகு]

  1. தமிழ் இணையக் கல்விக்கழகம்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிமரைக்கூ&oldid=3071911" இலிருந்து மீள்விக்கப்பட்டது