லிட்டில் ஜான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிட்டில் ஜான்
இராபின் ஊட்டும் லிட்டில் ஜானும் குறுகியப் பாலாத்தில் முதன்முதலில் சந்திக்கும்போது சண்டையிடுகின்றனர்
பிறப்புயார்க்சயர்
இறப்புஹேதர்சேஜ், டெர்பிஷயர்
மற்ற பெயர்கள்ரெனால்ட் கிரீன்லெஃப்
அறியப்படுவதுஇராபின் ஊட்டின் தோழர்

லிட்டில் ஜான் (Little John) என்பது இராபின் ஊட்டின் துணையாக இருப்பவரும், நண்பருமான ஒரு கதாபாத்திரம் ஆவார். இவர் பொதுவாக கதைகளில் ஏழு அடி உயரமான ஒரு பெரிய போர்வீரராக சித்தரிக்கப்படுகிறார். நாட்டுப்புறக் கதைகளில், இராபின் ஊட்டுனனான இவரது முதல் சந்திப்பின் போது ஆற்றின் குறுக்கே உள்ள குறுகிய மரப் பாலத்தில் அவருடன் சண்டையிட்டடார்.

நாட்டுப்புறவியல்[தொகு]

14 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் வில்லியம் லாங்லேண்டால் எழுதப்பட்ட தி விஷன் ஆஃப் பியர்ஸ் ப்ளோமேன் என்ற ஆங்கில பாடல் வரியில் இராபின் ஊட் பற்றிய முதலில் அறியப்பட்ட குறிப்பு காணப்படுகிறது. லிட்டில் ஜான் பழைய இராபின் ஊட் பதிவு செய்யப்பட்ட பழைய நாட்டுப்புறக் கதைப் பாடல்களிலும், கதைகளிலும் தோன்றுகிறார். [1] மேலும் இராபின் ஊட் பற்றிய பழைய குறிப்புகளில் ஒன்றான ஆண்ட்ரூ ஆஃப் வைன்டவுன் மற்றும் 1440 இல் வால்டர் போவர் எழுதியவற்றிலும் லில்லில் ஜான் தோன்றுகிறார்.[ மேற்கோள் தேவை ] ஆரம்பகால கதைகளில், லிட்டில் ஜான் அறிவாளியாகவும் அதிக திறன் கொண்டவராகவும் காட்டப்படுகிறார். இராபின் ஊட்டின் கதையான " எ கெஸ்ட் ஆஃப் ராபின் ஹோட் " இல், இவர் சோகமான வீரரைப் பிடிக்கிறார், மேலும் ராபின் ஊட் வீரரின் அடமானப் பணத்தைச் செலுத்த முடிவு செய்யும் போது, அவருடன் ஒரு வேலைக்காரனாக செல்கிறார். [2] "ராபின் ஹூட்ஸ் டெத் " கதைல், ராபின் தன்னுடன் அழைத்துச் செல்லும் மெர்ரி மேன்களில் இவர் மட்டுமே உள்ளார். 15 ஆம் நூற்றாண்டிய கதையான " ராபின் ஹூட் அண்ட் தி மோங்க் " என்ற கதையில், லிட்டில் ஜான் ராபினுடனான தகராறில் கோபத்துடன் வெளியேறுகிறார். இராபின் ஊட் பிடிபட்டதும், லிட்டில் ஜான் தான் தன் தலைவனை மீட்க திட்டமிடுகிறார். லிட்டில் ஜானின் பிற்கால சித்தரிப்புகள் அவரை தந்திரம் குறைந்தவராக சித்தரிக்கின்றன.

ஆரம்பகால கதைப்பாடல்களில் இந்தக் கதாபாத்திரத்திற்கான மூலக் கதை இடம்பெறவில்லை. 17 ஆம் நூற்றாண்டின் கதைப்பாடலின் படி, இவர் குறைந்தது ஏழு அடி உயரமானவராக இருந்தார். மேலும் இராபினும் இவரும் ஒரு குறுகிய பாலத்தை எதிரெதிராக கடக்கும்போது மோதல் ஏற்பட்டதாக அறிமுகப்படுத்தபடுகிறார். அதன்பின் அவர்கள் கம்புகளைக் கொண்டு சண்டையிடுகின்றனர். சண்டையில் இராபின் முறியடிக்கப்பட்டுகிறார். சண்டையில் தன்னை வெற்றி கொண்ட போதிலும், ஜான் தனது குழுவில் லிட்டில் ஜானை சேர்த்துக் கொள்ள ஒப்புக்கொள்கிறார். அப்போதிருந்து, இவரது அளவைப் பற்றிய விசித்திரமான குறிப்பாக இவர் லிட்டில் ஜான் என்று அழைக்கப்பட்டார். கதையின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பதிப்புகளில் இந்தக் காட்சி பெரும்பாலும் சித்தரிக்கபட்டுள்ளது. சில நவீன திரைப்பட பதிப்புகளில், லிட்டில் ஜான் இராபினுடனான சண்டையில் தோற்கிறார்.

ஹதர்சேஜ், செயின்ட் மைக்கேல் சர்ச் கல்லறையில் உள்ள லிட்டில் ஜானின் கல்லறை

ராபின் ஊட் கதையில், துவக்கத்தில் இருந்து இராபின் ஊட்டின் மரணம் வரை உடன் இருந்த ஒரே மெர்ரி மேன் லிட்டில் ஜான் மட்டுமே என்று பொதுவாக காட்டப்பகிறார்.

இவர் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லாத போதிலும், லிட்டில் ஜான் டெர்பிஷையரில் உள்ள ஹதர்சேஜ் கிராமத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் புதைக்கப்பட்டார் எனப்படுகிறது. ஒரு நவீன கல்லறை அவரது கல்லறையாக இருப்பிடப்படுகிறது. செவிவழிக் கதைகளின் சில பதிப்புகளில், இவரது இயற் பெயர் ஜான் லிட்டில் என வழங்கப்படுகிறது.

உள்ளூர் செவிவழிக் கதையின் படி, லிட்டில் ஜான் குடும்ப வீட்டிலிருந்து டெர்வென்ட் ஆற்றின் குறுக்கே ஒரு சிறிய குடிலைக் கட்டினார் எனப்படுகிறது. இந்த தளத்தில் இப்போது 15 ஆம் நூற்றாண்டின் பழைய பண்ணை வீடும், களஞ்சியமும் உள்ளது, இது ஆஃபர்டனில் நெதர் ஹவுஸ் என்று அழைக்கப்படுகிறது.

டப்ளினில், 12 ஆம் நூற்றாண்டில் லிட்டில் ஜான் நகரத்திற்குச் சென்று அங்கு தூக்கிலிடப்பட்டதாக ஒரு உள்ளூர் செவிவழிக்கதை தெரிவிக்கிறது.

பகுப்பாய்வு[தொகு]

வேலைக்காரனுக்கும் எஜமானருக்கும் இடையிலான உறவுகளை விளக்குவதில் லிட்டில் ஜான் முக்கிய பங்கு வகிப்பதாக வாதிடப்படுகிறது. மேலும் அவரது செயல்களின் சித்தரிப்பானது சமூகத்தின் அதிகார படிநிலைக்கு சவால் விடுவதாக உள்ளதைக் காணலாம். [3] : 14, 28, 33 

மேற்கோள்கள்[தொகு]

  1. Richards, Jeffrey (1988), Swordsmen of the Screen: From Douglas Fairbanks to Michael York, London and Boston: Henly, Routledge & Kegan Paul, p. 190.
  2. Holt 1982, ப. 17.
  3. Steiner, Emily; Barrington, Candace (2002) (in en). The Letter of the Law: Legal Practice and Literary Production in Medieval England. Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8014-8770-5. https://books.google.com/books?id=jGSPJTIyXVYC&q=Little+john%22&pg=PA1. 

நூல் பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிட்டில்_ஜான்&oldid=3844835" இலிருந்து மீள்விக்கப்பட்டது