இலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவ வடிவங்களில் ஒன்றான
இலிங்கம்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்: வேடுவக் கோலம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

இலிங்கம், லிங்கம் (lingam), அல்லது சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.

லிங்க பாகங்கள்[தொகு]

இலிங்கத்தின் தண்டுப்பகுதியில் ருத்ர,விஷ்ணு,பிரம்ம பாகங்கள்
இலிஙகத்தின் பாகமான சக்தி பாகம்

லிங்கம் வானத்தைக்குறிக்கும்.ஆவிடை பூமியைக்குறிக்கும் குறிக்கும்.விண்ணுக்கும் மண்ணுக்குமாகா சிவபெருமான் எழுந்தருளியதை இது குறிக்கின்றது[1].மற்றோரு கருத்தின்படி ஆவிடை குண்டத்தைக்குற்க்கும் அதில் எரியும் நெருப்பு லிங்கமாகும்.இதன் காரணமாகவே சிவன் செந்தழல் வண்ணன் என்று அழைக்கப்படுகின்றார். குண்டம் போன்ற ஆவிடை உருவத்தையும், தீந்தழல் போன்ற ருத்ர பாகம் அருவுருவத்தையும் குறிக்கின்றது.இதுவே அருவுருவமாகிய சிவனின் சொரூபம் என கூறுகின்றனர்[2].

மற்றோரு கருத்தின்படி இலிங்கம் ஆண் வடிவம், பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது. இலிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் இந்த ஆண் வடிவம் வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.

ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்த பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும்.

ஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது பெண் வடிவமாகும், இதற்கு சக்தி பாகம் என்று பெயர்.

  • ருத்ர பாகம்
  • விஷ்ணு பாகம்
  • பிரம்ம பாகம்
  • சக்தி பாகம்

முன்னோர்களின் நினைவாக நடுகல்[தொகு]

பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் பல பகுதிகளில் சைவர்களின் நடுகல் கற்கள் காணப்படுகின்றன. சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

பெயர்க் காரணம்[தொகு]

லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும்[3].

ஆண்குறி[தொகு]

சில இடங்களில் லிங்கம் ஆண்குறியின் வடிவிலேயே காணப்படுகிறது. கூடலின் போது பெண் ஆண் குறிகளின் நிலையையே ஆவுடை லிங்கம் என்று வழங்கப்படுகிறது. சில இடங்களில் லிங்கம் அன்றி, ஆவுடையார் மட்டுமே லிங்கமாக கருதப்படுகிறது.

சொற்பொருள்[தொகு]

சான் பிரான்சிஸ்கோவிலுள்ள ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் உள்ளது. லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், ஆண்குறியைக் குறிப்பதாகவும், வளம் என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங்காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் சமஸ்கிருதத்தில் இதற்குப் பல பொருள்கள் உள்ளதாகத் தெரிகிறது. வாமன் சிவ்ராம் ஆப்தேயின் சமஸ்கிருத அகராதி 7 பொருள்களை இச் சொல்லுக்குக் கொடுத்துள்ளது. இவற்றுள், லிங்கம் பல வகைப்படும். முகலிங்கம், சகஸ்ர லிங்கம், தாராலிங்கம், சுயம்பு லிங்கம் மேலகடம்பூர் என்ற ஊரில் அமிர்ததுளீ விழ்ந்து சுயம்பு லிங்கமானது

  • இறைவனின் வடிவம்
  • நோய்க்கான அறிகுறி
  • ஒரு புள்ளி அல்லது மறு
  • சான்று அல்லது சான்றுக்கான வழிமுறை
  • விளைவு அல்லது முதற் காரணத்தில் இருந்து உருவாகும் ஒன்று.
  • பால் குறிக்கும் இலக்கணக் கருத்துரு.
  • ஆண்குறி

என்பனவும் அடங்கும்.

இலிங்க வகைகள்[தொகு]

சிவபெருமான் சதாசிவ மூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார்.[4] இவை பஞ்ச லிங்கங்கள் எனவும் அறியப்படுகின்றன.

  1. சிவ சதாக்கியம்
  2. அமூர்த்தி சதாக்கியம்
  3. மூர்த்தி சதாக்கியம்
  4. கர்த்திரு சதாக்கியம்
  5. கன்ம சதாக்கியம்

இவற்றில் கன்ம சதாக்கியமாகிய பீடமும், லிங்கங்க வடிவமும் இணைந்து வழிபட்டோரால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவையாவன,

  1. சுயம்பு லிங்கம் - தானாய் தோன்றிய லிங்கம்.
  2. தேவி லிங்கம் - தேவி சக்தியால் வழிபடபட்ட லிங்கம்.
  3. காண லிங்கம் - சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம்.
  4. தைவிக லிங்கம் - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட லிங்கம்.
  5. ஆரிட லிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.
  6. இராட்சத லிங்கம் - இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
  7. அசுர லிங்கம் - அசுரர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
  8. மானுட லிங்கம் - மனிதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.

இவை தவிற பரார்த்த லிங்கம். சூக்கும லிங்கம்,ஆன்மார்தத லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், ஆகாச லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம் என எண்ணற்ற லிங்கங்கள் உள்ளன.

பெரிய கோவில்[தொகு]

மிகப்பெரிய லிங்கம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் ஆகும்.இது 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது.

சிவலிங்கங்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. பன்னிரு ஜோதிர் லிங்க வரலாறு எனும் அறிவானந்தத்தின் நூலில் 24 ஆம் பக்கத்தில்
  2. பன்னிரு ஜோதிர் லிங்க வரலாறு எனும் அறிவானந்தத்தின் நூலில் 24 ஆம் பக்கம்
  3. பன்னிரு ஜோதிர் லிங்க வரலாறு புத்தகம், பக்கம் 24
  4. நயன்தரும் சைவசித்தாந்தம் (நூல்) - நா ஞானகுமாரன் பக்கம் 38

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலிங்கம்&oldid=1629116" இருந்து மீள்விக்கப்பட்டது