லிங்கன் (2012 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Lincoln
லிங்கன்
அரங்க விளம்பரப் படம்
இயக்கம்ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
தயாரிப்புஸ்டீவன் ஸ்பீல்பெர்க்,
கேத்லீன் கென்னடி
மூலக்கதைடோரிஸ் கேர்ண்ஸ் குட்வின் எழுதிய Team of Rivals: The Political Genius of Abraham Lincoln என்னும் நூல்
படைத்தவர்
திரைக்கதைடோனி குஷ்னர்
இசைஜாண் வில்லியம்ஸ்
நடிப்புடேனியல் டே-லூயிஸ்
சேல்லி ஃபீல்ட்
டேவிட் ஸ்ட்ராட்டைர்ன்
ஜோசப் கோர்டன்-லெவிட்
ஜேம்ஸ் ஸ்பேடர்
ஹேல் ஹோல்ப்ரூக்
டாம்மி லீ ஜோண்ஸ்
ஒளிப்பதிவுஜேனஸ் கமீன்ஸ்கி
படத்தொகுப்புமைக்கிள் கான்
கலையகம்ட்ரீம்வொர்க்ஸ் ஸ்டூடியோஸ்
ரிலயன்ஸ் என்டெர்ட்டெய்ன்மென்ட்
பார்ட்டிசிப்பன்ட் மீடியா
ஆம்ப்ளின் என்டெர்ட்டெய்ன்மென்ட்
தி கென்னடி/மார்ஷால் குழு
விநியோகம்டச்ஸ்டோன் பிக்சர்ஸ்
(டொமஸ்டிக்)
20ஆம் நூற்றாண்டு பாக்ஸ்
(பன்னாட்டளவில்)
வெளியீடுஅக்டோபர் 8, 2012 (2012-10-08)(நியூ யார்க் திரைப்படத் திருவிழா)
நவம்பர் 9, 2012 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்150 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$50-65 மில்லியன்[2]
மொத்த வருவாய்$107,898,000[2]

லிங்கன் (Lincoln) என்பது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உருவாக்கி ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 2012ஆம் ஆண்டு வெளியான வரலாற்று-நாடக முறை திரைப்படம் ஆகும். இதில் டேனியல் டே-லூயிஸ் என்பவர் அமெரிக்க அதிபரான ஆபிரகாம் லிங்கனாகவும் சேல்லி ஃபீல்ட் என்பவர் லிங்கனின் மனைவி மேரி டாட் லிங்கனாகவும் நடித்துள்ளனர்.[3]

மூல நூலும் திரைப்படத்தின் கருவும்[தொகு]

டோரிஸ் கேர்ண்ஸ் குட்வின் என்பவர் ஆபிரகாம் லிங்கனின் வரலாறாக எழுதிய Team of Rivals: The Political Genius of Abraham Lincoln என்னும் நூலின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு "லிங்கன்" திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையின் இறுதி நான்கு மாதங்களில் நடந்த வரலாற்றுச் சிறப்பான நிகழ்வுகள் இந்த திரைப்படத்தில் விவரிக்கப்படுகின்றன. குறிப்பாக 1865 சனவரி மாதம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பாராளுமன்றத்தின் கீழவையில், அமெரிக்காவில் நிலவிய அடிமைத்தன முறையை ஒழிக்க சட்டம் இயற்றுவதற்காக லிங்கன் மேற்கொண்ட முயற்சிகள் இந்த வரலாற்றுத் திரைப்படத்தில் உயிரோட்டமாக சித்தரிக்கப்படுகின்றன.

படப்பிடிப்பு[தொகு]

படப்பிடிப்பு 2011, அக்டோபர் 17ஆம் நாள் தொடங்கியது.[4] திசம்பர் 19, 2011இல் முடிந்தது.[5] படம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் 2012, நவம்பர் 9ஆம் நாள் வெளியானது. பரவலாக ஐக்கிய அமெரிக்காவில், நவம்பர் 16இல் வெளியானது.[6] 2012, சனவரி 25ஆம் நாள் ஐக்கிய இராச்சியத்திலும் உலகின் பிற இடங்களிலும் வெளியிடுவதாகத் திட்டம்[7]

லிங்கன் திரைப்படம் பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆபிரகாம் லிங்கனாக நடிக்கும் டேனியல் டே-லூயிஸ் மிகச் சிறப்பாக நடித்துள்ளதாகப் புகழ் பெற்றுள்ளார். மிகச்சிறந்த நடிகர் அக்காதெமி விருதினை அவர் பெறுவார் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "LINCOLN (12A)". British Board of Film Classification. 2012-11-28. Archived from the original on 2014-01-12. பார்க்கப்பட்ட நாள் 2012-11-28.
  2. 2.0 2.1 "Lincoln (2012)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2012-12-04.
  3. Breznican, Anthony (ஏப்ரல் 13, 2011). "Steven Spielberg's 'Lincoln' gets its Mary Todd: Sally Field". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் சூன் 28, 2011. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. McClintock, Pamela (October 12, 2011). "Participant Media Boarding Steven Spielberg's 'Lincoln' (Exclusive)". Hollywood Reporter (Los Angeles). http://www.hollywoodreporter.com/news/participant-media-steven-spielberg-lincoln-247470. பார்த்த நாள்: October 15, 2011. 
  5. "Filmmakers really liked Petersburg". The Progress-Index (Petersburg, Virginia). December 29, 2011 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 25, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121125233051/http://progress-index.com/news/op-ed/filmmakers-really-liked-petersburg-1.1250470#axzz1k7PM6CQe. பார்த்த நாள்: January 22, 2012. 
  6. Fischer, Russ (நவம்பர் 19, 2010). "Daniel Day-Lewis to Star in Steven Spielberg's 'Lincoln'".
  7. McClintock, Pamela (சனவரி 23, 2012). "Fox Partnering with DreamWorks on Steven Spielberg's 'Lincoln'". The Hollywood Reporter. Archived from the original on ஜூலை 1, 2014. பார்க்கப்பட்ட நாள் April 1, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிங்கன்_(2012_திரைப்படம்)&oldid=3591596" இலிருந்து மீள்விக்கப்பட்டது