லா பா சாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமைவிடம்: 1°16′50.2″N 103°51′01.2″E / 1.280611, 103.850333

"லா பா சாட் " ( தெலோக் ஆயர் கடைத்தொகுதி)

"லா பா சாட் " (தெலோக் ஆயர் கடைத்தொகுதி) என்பது சிங்கப்பூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களில் இதுவும் ஒன்று. 1825 முதல் இக்கடைத் தொகுதி இயங்கிவருகிறது. இது பல்வேறு சிறு உணவுக்கடைகள், 24 மணி நேரம் இயங்கும் கடைகள், செருப்பு தைக்கும் கடை, தையல் கடை போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலும் உணவுக் கடைகளே அதிகம். பல்வேறு நாட்டு உணவுகள் கிடைக்கும் இடம் இது. வார இறுதி நாட்களில் சிறு இசைக்குழுவின் இசைக் கச்சேரியும் நடக்கும்.

19 ஆம் நூற்றாண்டில் இக்கடைத் தொகுதியானது மிகச்சிறிய மரக்கட்டிடத்தில் இருந்து வந்தது. தெலோக் ஆயர் என்ற மலாய் மொழிச் சொல்லுக்கு தண்ணீர் வளைகுடா என்று பெயர். இக்கடைத் தொகுதியானது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வார்ப்பு இரும்பினால் கட்டப்பட்டுள்ளது.

முதலில் பல்வேறு வகையான கடைகள் இங்கு இருந்தாலும் 1973 ற்கு பின்னர் இதில் பெரும்பாலும் உணவுக்கடைகளே இயங்கிவருகின்றன. ஃராபல்ஸ் ப்ளேஸ் இரயில் நிலையம் அருகில் இதன் அமைந்துள்ளது. பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக செப்டம்பர் 01 ,2013 முதல் இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது மூடப்பட்டுள்ளது.

இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லா_பா_சாட்&oldid=1635518" இருந்து மீள்விக்கப்பட்டது