லாவணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லாவணிக் கலையில் புகழ்பெற்ற மராத்தியக் கலைஞர் சுரேக்கா புனேக்கர்

இலாவணி தமிழகத்தின் பழம்பெரும் கிராமிய இசைப் பாடல் கலை. மகாராட்டிரம், தெற்கு மத்தியப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பிரபலமாக உள்ளது. அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கி.பி.1400-களில், தமிழகத்தின் தஞ்சாவூர்ப் பகுதியை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தபோது, அவர்களோடு தஞ்சைக்கு இக்கலையை கொண்டு வந்ததாக, நாட்டுப்புற ஆய்வுகளிலிருந்து அறியமுடிகிறது.இது ஹோலித்திருவிழாவின்போதும்,குழந்தை பிறந்த 8நாட்கள் வரையில், தீய சக்திகள் அண்டாதிருக்கவும் பாடப்படுகிறது.[1]

சங்ககாலத்திற்கு முன்னரே, வேறு பெயரில் இக்கலை தமிழகத்தில் வேர் ஊன்றி இருந்ததாகவும், ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். லாவணி என்ற சொல்லுக்கு, மராட்டி மொழியில் நாற்று நடுதல் என்ற பொருள் உள்ளது. வயலில் வேளாண் பணி புரியும் பெண்கள், உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்க,ஒருவருக்கு ஒருவர் கிண்டல்-கேலி செய்யும் விதமாக, இயல்பான கிராமிய இசைப் பாங்குடன் பாடத்தொடங்கியதே லாவணிக்கலையின் தொடக்கம் என ஆய்வுகள் நிறுவுகின்றன.

மராட்டியர்கள், தஞ்சையை ஆண்ட காலக்கட்டத்தில், இக்கலை வேகமாக தமிழகமெங்கும் பரவத்தொடங்கிற்று. இக்கலையில் மேடையில் இருவர் எதிர் எதிர் அமர்ந்து, ஒருவரை ஒருவர் ஏளனம் செய்து விவாதிப்பது போலப் பாடுவர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த, தஞ்சை நஞ்சைக் கலைக்குழு என்னும் நாட்டுப்புறவியல் நிறுவனத்துடன் இணைந்து, சென்னையைச் சேர்ந்த தமிழ்க்கூடம் கலை-இலக்கிய இயக்கம், லாவணி கலை குறித்து ஒரு விரிவான ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளது .லாவணி கலை குறித்து பத்து ஆண்டுகாலம் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்ற, தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் விவேகானந்த கோபாலனின் வரலாற்று ஆய்வுகளை பின்புலமாகக் கொண்டு, எழுத்தாளர்-இயக்குநர் எஸ்.ராஜகுமாரன் இந்த ஆவணப் படத்தை இயக்கி உள்ளார்.

மேற்கோள்கள் [தொகு]

  1. தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்

வெளி இணைப்புகள் [தொகு]

தமிழர் ஆடற்கலை வடிவங்கள் தொகு

அம்மன் கூத்து | அன்னக்கொடி விழாக்கூத்து |   அனுமன் ஆட்டம் | ஆலி ஆட்டம் | இருளர் இனமக்களின் ஆட்டம் | இலாவணி | எக்காளக் கூத்து | ஒயிலாட்டம் | கரகாட்டம் | கரடியாட்டம் | கழியலாட்டம் | கணியான் கூத்து | காவடியாட்டம் | குறவன் குறத்தி ஆட்டம் | குரவைக் கூத்து| துணங்கைக் கூத்து| வள்ளிக்கூத்து| கோணங்கியாட்டம் | கொக்கலிக்கட்டை ஆட்டம் | கோலாட்டம் | கும்மியாட்டம் | சக்கையாட்டம் | சலங்கையாட்டம் | சிலம்பாட்டம் | சேவயாட்டம் | துடும்பாட்டம் | தெருக்கூத்து | தேவராட்டம் | பரதநாட்டியம் | பறைமேளக் கூத்து | பறையாட்டம் | தப்பாட்டம்| பாவைக்கூத்து | பாம்பாட்டம் | பெரியமேளம் | புலி ஆட்டம் | பொம்மலாட்டம் | பொய்க்கால் குதிரை ஆட்டம் | மகுடிக் கூத்து | மயில் ஆட்டம் | மரக்காலாட்டம் | மாடாட்டம் | ராஜா ராணி ஆட்டம் | ஜிக்காட்டம் | பூசாரிக் கைச் சிலம்பாட்டம் | சாமியாட்டம் | ஒயில் கும்மி | வெறியாட்டு |

"http://ta.wikipedia.org/w/index.php?title=லாவணி&oldid=1363468" இருந்து மீள்விக்கப்பட்டது