லாக்ராஞ்சியின் தேற்றம்
லாக்ராஞ்சியின் தேற்றம் (Lagrange's theorem) கணிதத்தில் குலக்கோட்பாட்டுப் பிரிவில் ஒரு அடிப்படைத் தேற்றம். இத்தாலியக் கணிதவியலர் லாக்ராஞ்சி (1736-1813) இதை முதன்முதல் கண்டுபிடித்தார்.
அது என்ன சொல்கிறதென்றால், ஒரு முடிவுறு குலத்தின் ஒவ்வொரு உட்குலத்தின் கிரமம் (= உறுப்புகளின் எண்ணிக்கை) (order) தாய்க்குலத்தின் கிரமத்தை சரியாக வகுக்கும்.
தாய்க்குலத்தை
யாகவும் உட்குலத்தை
ஆகவும் கொண்டால்,
ஐ சரியாக வகுக்கிறது. இதனால் பின்வரும் வரையறை நியாயப் படுத்தப்படுகிறது:
வரையறை: முழு எண்
,
இல்
இன் குறியெண் (Index) எனப்படும். இதற்குக் குறியீடு ![[G : H].](http://upload.wikimedia.org/wikipedia/ta/math/5/5/6/556d8c808faf403e245a28ef9a0a5044.png)
[தொகு] நிறுவல்
வலது இணைக்கணம் என்ற கருத்து இங்கு பயன்படுத்தப்படுகிறது.
இன் உறுப்புக்களிடையே
என்றோர் உறவு உண்டாக்கு. இவ்வுறவு, சமான உறவின் மூன்று நிபந்தனைகளையும் சரியாக்குவதால், இது
ஐ சமானப் பகுதிகளாகப் பிரிக்கிறது. இச்சமானப் பகுதிகள்
இன் வலது இணைக்கணங்கள் என்றும் கூறப்படும்.இச்சமானப் பகுதிகள் எல்லாவற்றிலும் உறுப்புகள் ஒரே எண்ணிக்கையில் இருக்கும் என்று காட்டிவிட்டால், லாக்ராஞ்சியின் தேற்றம் நிறுவப்பட்டு விடும்; ஏனென்றால் உட்குலம்
ம் ஒரு சமானப் பகுதிதான் -- அது முற்றொருமை
ஐ உள்ளடக்கியிருக்கும் சமானப் பகுதி.
என்ற இரண்டு வலது இணைக் கணங்களைப் பார். அவைகளினிடையே
என்ற கோப்பைப் பார். இது ஓர் இருவழிக் கோப்பு; ஏனென்றால்,
இலுள்ள ஒவ்வொரு
க்கும்,
Q.E.D.
[தொகு] விளைவுகள்
- ஒர் உறுப்பால் பிறப்பிக்கப்பட்ட உட்குலத்தின் கிரமம் அவ்வுறுப்பின் கிரமத்திற்குச் சமமாக இருக்குமாதலால் ஒவ்வொரு உறுப்பின் கிரமமும் குலத்தின் கிரமத்தை சரியாக வகுக்கும்.
- இன்னொரு முக்கியமான விளைவு: ஒரு குலத்தின் கிரமம் பகா எண்ணாக இருக்குமானானால் அது சுழற்குலமாகத்தான் இருக்கவேண்டும்.
- லாக்ராஞ்சியின் தேற்றத்தை
என்று எழுதினால், முடிவுறாக் குலங்கள்
க்கும் எண்ணளவை என்ற கருத்தடிப்படையில் இச்சமன்பாடு உண்மை பயக்கும்.



![|G| = [G : H] \times |H|](http://upload.wikimedia.org/wikipedia/ta/math/a/4/f/a4faea1a128c03081ae40d9fcf644ad1.png)