லாக்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடமிருந்து வலம், β-லாக்டம், γ-லாக்டம் மற்றும் δ-லாக்டம் ஆகியவற்றின் பொது அமைப்பு.

லாக்டம் (lactam) ஒரு வளைய அமைடு (cyclic amide) ஆகும். இதில் கார்பொனைல் தொகுதியொன்றும் அமைடு தொகுதி ஒன்றும் அமைந்திருக்கும்.

பெயர்க்காரணம்[தொகு]

லாக்டம் எனும் பெயர் லாக்டோன் மற்றும் அமைடு ஆகியவற்றின் கூட்டுப்பெயராகும்.

வகைகள்[தொகு]

வளையத்தில் அமைடு கார்பொனைல் தொகுதியிலிருந்து அமையுமிடத்தைப் பொறுத்து மூன்று வகைகள் உள்ளன. அவையாவன,

β-லாக்டம் - (2,4) இது மொத்தம் நான்கு கார்பன்கள் கொண்ட வளையம் ஆகும். கார்பொனைல் தொகுதியிலிருந்து இரண்டு கார்பன்கள் தள்ளி அமைடு தொகுதி அமைந்திருக்கும்.

γ-லாக்டம் - (3,5)இது மொத்தம் ஐந்து கார்பன்களைக் கொண்டது. கார்பொனைல் தொகுதியிலிருந்து மூன்று கார்பன்கள் தள்ளி அமைடு தொகுதி அமைந்திருக்கும்.

δ-லாக்டம் - (4,6) இது ஆறு கார்பன்கள் கொண்ட வளையமாகும். கார்பொனைல் தொகுதியிலிருந்து நான்கு கார்பன்கள் தள்ளி அமைடு தொகுதி அமைந்திருக்கும்.

வேதிவினைகள்[தொகு]

பலபடியாக்க வினை மூலம் இவை பல்அமைடுகளாக (polyamide) மாற்றப்படுகின்றன. இந்த பல்அமைடுகள் தொழில் துறையில் பயன்படுகின்றன.

பெனிசிலின்[தொகு]

பெனிசிலின் பாக்டீரியக்கொல்லிகளின் ஆதார அமைப்பு β-லாக்டம் வளையமே ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்டம்&oldid=3599797" இலிருந்து மீள்விக்கப்பட்டது