றொபேட் கிறேவ்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
றொபேட் கிறேவ்ஸ் (Robert Graves; தமிழக வழக்கு: ராபர்ட் கிரேவ்ஸ்; 24 ஜூலை 1895 – 7 டிசம்பர் 1985) 1895 இல் இலண்டனில் பிறந்த ஆங்கில கவிஞர் ஆவார். 'கவிதைகள்' (1953), 'படிகள்' (1958), 'திரட்டிய கவிதைகள்' (1959) முதலிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். உமர்கய்யாமின் 'ருபையாத்' காவியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 1961இல் ஒக்ஸ்ஃவோட் பல்கலைக்கழகத்தில் 'கவிதைப் பேராசிரியராகத்' தேர்ந்நெடுக்கப்பட்டார். கவிதக்களைத் தவிர பல வரலாற்று நாவல்களையும், இலக்கிய விமர்சனங்களையும் எழுதியுள்ளார். கிரேவ்ஸ் 1985 இல் மரணமடைந்தார்.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் ராபர்ட் கிரேவ்ஸ் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |