உரோமைப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரோமப் பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரோமப் பேரரசு
Roman Empire
Res publica Romana

கிமு 27–1453
 

குறிக்கோள்
Senatus Populusque Romanus (SPQR)  (இலத்தீன்)
"The Senate and People of Rome"
கிபி 117 இல் ரோமப் பேரரசு
தலைநகரம் ரோம்
(கிமு 44 – கிபி 286)

கொன்ஸ்டண்டினோபிள்
(300 முதல்)

மொழி(கள்) இலத்தீன், கிரேக்கம்
சமயம் Roman paganism, பின்னர் கிறிஸ்தவம்
அரசாங்கம் முடியாட்சி
பேரரசன்
 -  கிமு 27 – கிபி 14 ஆகுஸ்டஸ்
 -  475–476 ரோமுலஸ் ஆகுஸ்டஸ்
துணைப் பேரரசன் (consul)
 -  கிமு 27–23 ஆகுஸ்டஸ்
 -  476 பசீலிஸ்கஸ்
சட்டசபை ரோமன் செனட்
வரலாறு
 -  ஆகுஸ்டஸ் சீசர் அறிவிப்பு கிமு 27
 -  ஆக்டியம் போர் செப்டம்பர் 2 கிமு 31
 -  ஒக்டேவியன் அறிவிப்பு ஜனவரி 16 கிமு 27
 -  டயோகிளேசியன் கிழக்கு, மேற்காகப் பிரித்தமை 285
 -  கொன்ஸ்டன்டினோபிள் தலைநகராக அறிவிப்பு 330
 -  கொன்ஸ்டன்டினோபிள் துருக்கியரிடம் வீழ்ந்தது மே 29 1453 1453
பரப்பளவு
 -  கிமு 25[1] 27,50,000 km² (10,61,781 sq mi)
 -  50[1] 42,00,000 km² (16,21,629 sq mi)
 -  117[1] 50,00,000 km² (19,30,511 sq mi)
 -  390 [1] 44,00,000 km² (16,98,849 sq mi)
மக்கள்தொகை
 -  கிமு 25[1] est. 5,68,00,000 
     அடர்த்தி 20.7 /km²  (53.5 /sq mi)
 -  117[1] est. 8,80,00,000 
     அடர்த்தி 17.6 /km²  (45.6 /sq mi)
நாணயம் சொலிடஸ், ஓரியஸ், டெனாரியஸ், செஸ்டேர்ஷியஸ்
Warning: Value specified for "continent" does not comply

உரோமைப் பேரரசு அல்லது ரோமப் பேரரசு (Roman Empire) ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரவியிருந்த ஒரு முன்னாள் ஏகாதிபத்திய அரசு ஆகும். இது பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ஜேர்மனி மற்றும் எகிப்து என பல்வேறு நாடுகளையும் தனது கைவசம் வைத்திருந்த பண்டைக் காலத்து மாபெரும் பேரரசாகும். ரோமப் பேரரசானது 500-ஆண்டுகள் பழமை வாய்ந்த ரோமக் குடியரசை (கிமு 510கிமு 1ம் நூற்றாண்டு) அடுத்து ஆட்சிக்கு வந்தது. உள்நாட்டுப் போர்களால் இப்பேரரசு வலிமை குன்றி பின்னர் பைசண்டைன் பேரரசாக கொன்ஸ்டண்டினோபிள் வீழ்ச்சி (1453) வரை ஆட்சியில் இருந்தது. குடியரசில் இருந்து பேரரசாக மாறிய காலப்பகுதி பலராலும் பலவிதமாகத் தரப்பட்டுள்ளது. கிமு 44 இல் ஜூலியஸ் சீசர் பேரரசின் மன்னனாக முடிசூடல், சீசரின் வாரிசான ஆகுஸ்டஸ் செப்டம்பர் 2, கிமு 31 இல் ஆக்டியம் போரில் வென்றமை ஆகியவை சிலவாகும்.

குடியரசாக இருக்கும் போது ரோமின் விரிவாக்கம் இடம்பெற்றது. ஆனாலும் அதன் உச்ச நிலை டிராஜான் என்ற பேரரசின் காலத்தில் ஏற்பட்டது. இவனது காலத்தில் ரோமப் பேரரசு அண்ணளவாக 5,900,000 கிமீkm² (2,300,000 sq மைல்) நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பை பல நூற்றாண்டுகளாக இப்பேரரசு கொண்டிருந்தமையால், மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், மற்றும் அரசுத் துறைகளில் இதன் செல்வாக்கு இன்று வரையில் மிகுந்து காணப்படுகிறது.

ரோமப் பேரரசின் முடிவு காலம் கிட்டத்தட்ட செப்டம்பர் 4 கிபி 476 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் கடைசி மன்னன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் என்பவன் பதவியில் இருந்து இறக்கப்பட்டான். ஆனாலும் பதிலுக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நாளுக்கு முன்னர் ரோமப் பேரரசு மேற்கு, கிழக்கு என இரண்டாகப் பிரிந்திருந்தாலும் டயோகிளேசியன் என்ற கடைசிப் பேரரசன் கிபி 305 ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையில் அவனே முழுமையான பேரரசின் கடைசி மன்னனாக இருந்தான். மேற்கு ரோமப் பேரரசு 5ம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. பைசண்டைன் பேரரசு என அழைக்கப்படும் கிழக்கு ரோமப் பேரரசு 1453 இல் ஓட்டோமான் பேரரசிடம் வீழ்ச்சியடையும் வரையில் கிரேக்க-ரோமன் சட்டபூர்வ மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பேணி வந்திருந்தது.

ரோமக் குடியரசு, மற்றும் ரோமப் பேரரசின் நிலப்பரப்புகள்: கிமு 218 (கரும் சிவப்பு), கிமு 133 (இளம் சிவப்பு), கிமு 44 (செம்மஞ்சள்), கிபி 14 (மஞ்சள்), கிபி 14 இன் பின்னர் (பச்சை), கிபி 117 (இளம் பச்சை).

பேரரசர்கள்[தொகு]

யூலியஸ் சீசர்[தொகு]

யூலியஸ் சீசர் கிமு 59 தொடக்கம் 44 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உரோமப் பேரரசை ஆண்டார். யூலியஸ் சீசர் பேரரசராகும் முன்னர் பிரான்ஸின் ஆளுநராக இருந்தவர். கிமு 54ஆம் ஆண்டு இங்கிலாந்தை வெற்றிகொண்ட பின்னரே இவர் பேரரசர் ஆனார். இவர் எகிப்தை கைப்பற்றும் போது எகிப்தின் அழகிய இராணி செலோபத்ரா என்பவரை காதலித்தார். எகிப்தைக் கைப்பற்றிய பின் ரோமிற்குத் திரும்பியபோது இவர் சர்வாதிகாரி ஆனார். இவரே ரோமப் பேரரசில் சிறந்ததோர் நிர்வாகத்தை உருவாக்கினார். செனட் எனும் சையின் அங்கத்தவர்களின் தொகையையும் இவரே அதிகரித்தார். யூலியஸ் சீசர் கிமு 44 ஆண்டில் கொலை செய்யப்பட்டார்.

ஒகஸ்டஸ் சீசர்[தொகு]

ஒகஸ்டஸ் சீசர் என்னும் பேரரசனே கோலோசியம் விளையாட்டரங்கு கெரகெல்லா நீச்சல் தடாகம் போன்றவற்றை நிர்மாணித்ததாகக் கருதப்படுகிறது. இவரே பாலங்கள், வீதிகள், பாரிய கட்டடங்கள் போன்ற பலவற்றை பேரரசின் காலத்தில் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. ஒகஸ்டஸ் சீசரின் தந்தை யூலியஸ் சீசர் ஆவார்.

நீரோ மன்னன்[தொகு]

நீரோ மன்னன் இவன் கிமு 37ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 15ஆம் திகதி பிறந்தார். நீரோ மன்னனே யூலியர்-கலியுதின் வம்சத்தின் ஐந்தாவதும் இறுதியுமான உரோமப் பேரரசர் ஆவார். இவர் குளோடியசு எனும் உரோமப் பேரரசனின் வளர்ப்புப் பிள்ளை ஆவார். குளோடியசு இறந்த பின்னர் கிமு 54ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆந் திகதி அன்று ரோமப் பேரரசராகப் பதவியேற்றான். நீரோ மன்னன் தனது முப்பதாவது வயதில் கிமு 68ஆம் ஆண்டில் சூன் மாதம் ஒன்பதாம் திகதி மரணமுற்றான்.

குளோடியசு[தொகு]

குளோடியசு மன்னனே உரோமப் பேரரசின் நான்காவது பேரரசன் ஆவான். இவர் கிமு பத்தாம் நூற்றாண்டில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் லக்டூனம் எனும் இடத்தில் பிறந்தார். இவருக்கு முன்பாக உரோமப் பேரரசராக கலிகுலா என்பவரும் இவருக்குப் பின்பாக உரோமப் பேரரசராக நீரோ என்பவரும் ஆட்சியில் இருந்தனர்.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உரோமைப்_பேரரசு&oldid=1611985" இருந்து மீள்விக்கப்பட்டது