ரோகண விஜயவீர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரோகண விஜயவீர

ரோகண விஜயவீர (ஜூலை 14, 1943 - நவம்பர் 13, 1989) ஒரு சோசலிசப் புரட்சியாளர். இலங்கையின் தீவிரவாத இயக்கமாக இருந்த ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியை அமைத்து அதன் தலைவராக இருந்தவர். பொலிவியாவின் புரட்சியாளரான சே குவேராவின் வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர். இவரது கம்யூனிசக் கொள்கைகள் இலங்கையின் வறிய மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் தென் மாகாணத்தில் கொட்டேகொட என்னும் மீன்பிடிக் கிராமமொன்றில் பிரெஞ்சுப் புரட்சி நினைவு நாள் ஒன்றில் (ஜூலை 14) பிறந்தவர் ரோகண. இவரது தந்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்தவராக இருந்தவர். கலாநிதி எஸ். ஏ. விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய தோழராக இருந்தவர்.

[தொகு] உயர் கல்வி

பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் உயர்கல்வி பெற மொஸ்கோ சென்றார். அங்கு மருத்துவத்துடன் மார்க்சிசக் கொள்கைகளைத் தீவிரமாகக் கற்க ஆரம்பித்தார். அத்துடன் சோவியத் ஒன்றியத்தில் அக்காலத்தில் நிலவிய சோசலிசம் உண்மையான பொதுவுடமைக் கொள்கைகளுக்கு ஏற்பானதாக இல்லை என்பதை உணர ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் 1964 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்