ரெசொல்யூட் மேஜை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா ரெசொல்யூட் மேசையில் அமர்ந்திருக்கிறார் (2009).

ரெசொல்யூட் மேசை (Resolute desk) என்பது அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான ஓவல் ஆபீசில் உள்ள தொன்மையான மேசை ஆகும். இந்த மேசை பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடலில் மூழ்கிப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ஹெச்.எம்.எஸ். ரெசொல்யூட் கப்பலின் உடைந்த பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இரட்டை மேசைகளில் ஒன்று ஆகும். இதே போன்ற மற்றொரு மேசை கிரின்னேல் மேஜை என்ற பெயரில் அழைக்கப் படுகிறது. இது தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெசொல்யூட்_மேஜை&oldid=1360687" இலிருந்து மீள்விக்கப்பட்டது