ரெசுல் பூக்குட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Padmashri Dr. Resul Pookutty
Resul Pookutty.jpg
பிறப்பு 1971 (அகவை 42–43)
Anchal, கொல்லம், கேரளம், இந்தியா
தொழில் திரைப்படம் sound design
நடிப்புக் காலம் 1997 - present
துணைவர் Shadia [1]
இணையத்தளம் http://www.resulpookutty.in

ரெசுல் பூக்குட்டி (மலையாளம்: റസൂല്‍ പൂക്കുട്ടി ) (பிறந்த ஆண்டு: 1971)இந்திய திரைப்பட ஒலி வடிவமைப்பு, ஒலித் தொகுப்பு மற்றும் ஒலிக்கலவை கலைஞர் ஆவார்.[2][3] ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தில் சிறந்த ஒலிக் கலவை செய்ததற்கான அகாதமி விருது ரிச்சர்டு ப்ரைக் மற்றும் இயன் டேப் ஆகியோருடன் இணைந்து இவருக்கு கிட்டியது. இவர் அமெரிக்க திரையுலகம், இந்தி திரையுலகம் மற்றும் மலையாள திரையுலகில் பணிபுரிந்திருக்கிறார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கேரளாவின் கொல்லம் நகரத்தில் இருந்து சுமார் 58 கிமீ தொலைவில் உள்ள அஞ்சல் என்னும் பகுதியின் விளாக்குபரா என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் இவர் பிறந்தார். வறுமையில் உழன்ற குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் கடைசியாக இவர் பிறந்தார். இவரது தந்தை ஒரு தனியார் பேருந்து நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதகராய் இருந்தார். பூக்குட்டி 6 கிமீ நடந்து சென்று தான் பள்ளிக்கு செல்ல வேண்டியதாய் இருந்தது. அவரது கிராமத்தில் அப்போது மின்சார வசதி கிடையாது என்பதால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் அவரது படிப்பு சென்றது.[4][5]

புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் 1995 ஆம் ஆண்டில் இவர் பட்டம் பெற்றார்.[3]

தொழில் வாழ்க்கை[தொகு]

பட்டம் பெற்ற பின் பூக்குட்டி மும்பை சென்று விட்டார். ”இந்த கல்லூரியில் பட்டம்பெற்றவர்கள் இயல்பாய் செய்யும் குடிபெயர்வு” இது என அவர் குறிப்பிட்டார். ”மும்பை திரைப்படத் துறையில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் 95 சதவீதம் பேர் புனே நிறுவனத்தில் படித்து வந்தவர்கள்” என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.[3] 1997 ஆம் ஆண்டில் ரஜத் கபூர் இயக்கிய பிரைவேட் டிடெக்டிவ்: டூ பிளஸ் டூ பிளஸ் ஒன் என்கிற படத்தில் ஒலி வடிவமைப்பில் பூக்குட்டிக்கு அறிமுகம் கிட்டியது. 2005 ஆம் ஆண்டில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பிளாக் திரைப்படம் தான் இவருக்கு திருப்புமுனையாய் அமைந்தது. அதன் பின் முஸாபிர் (2004), ஜிந்தா (2006), டிராபிக் சிக்னல் (2007), காந்தி, மை ஃபாதர் (2007), சவாரியா (2007) மற்றும் துஸ் கஹானியாம் (2007) ஆகிய பெரிய தயாரிப்புகளில் இவருக்கு ஒலி பொறியமைக்கும் வாய்ப்பு கிட்டியது.[2] காந்தி, மை ஃபாதர் திரைப்படம் தன்னை மிகவும் நெகிழ வைத்த திரைப்படமாக 2008 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தான் அளித்த ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிட்டார். “இந்த படத்திற்கு கலவை செய்கையில் நான் அழுதே விட்டேன்.” என்றார் அவர். "இப்படம் என்னை மிகவும் பாதித்தது. இந்த படத்தில் என்னை நிறைய நீங்கள் பார்க்கலாம். இளம் வயதில் இருந்து தன்னுடைய முதுமைக் காலம் வரை காந்தியின் குரல் வயதாவதில் ஒரு குறிப்பிட்ட இழைமத்தைக் கொண்டுவர நான் முயன்றேன். இதற்காக பல நடிகர்களை வேலை வாங்கினோம். கலவை கட்டங்களிலும் கடுமையாய் உழைத்தோம்.”[6] டேனி போயில் தனக்கு மிகவும் பிடித்தமான இயக்குநர்களில் ஒருவர் என்று கூறும் பூக்குட்டி, ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது “முற்றிலும் புதிய அனுபவம்” என்று தெரிவித்தார். “வடிவம் என்பது ஒரு பிரச்சினையில்லை. அது பிலிமாக இருக்கட்டும், காணொளியாக இருக்கட்டும், புகைப்படக் கருவியாக இருக்கட்டும், அது பிரச்சினையில்லை. படத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் தேவைப்பட்டதே தவிர, அந்த வடிவம் படத்தை தீர்மானிக்க முடியாது. எனவே பல வகையான படக்கருவிகள் கொண்டு நாங்கள் படப்பிடிப்பு செய்தோம். 50 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகளை எண்மருவி படக்கருவி கொண்டு படம்பிடித்தோம்.”[6] இந்தி திரைப்பட உலகில் தொழில்நுட்ப வேலைக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்கிற தனது ஆதங்கத்தையும் அவர் அதே நேர்காணலில் வெளிப்படுத்தினார். “தொழில்நுட்ப சிறப்பு படத்தின் வர்த்தகரீதியான வெற்றியுடன் முழுக்க தொடர்புபட்டு இருக்கிற நிலையில் இந்நிலை சோகம் தருவதாய் இருக்கிறது. இந்தி திரைப்பட உலகில் மட்டும் தான் இது நிகழ்கிறது. வெளிநாட்டிலோ ஐரோப்பாவிலோ அவ்வாறு இல்லை. தொழில்நுட்பரீதியாக நீங்கள் வேலையை சரியாகச் செய்திருந்தால், படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ திரைப்பட சமூகமும் அவர்களது அமைப்பும் உங்களை அங்கீகரிக்கும்.”[6]

அமீர்கான் நடித்து முருகதாஸ் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப் படமான கஜினியில் இவர் ஒலி வடிவமைப்பு செய்திருந்தார். இவர் பங்கேற்ற முதல் பெரும் சர்வதேச படமான ஸ்லம்டாக் மில்லியனர் இவருக்கு ஒரு அகாதமி விருதினைப் பெற்றுத் தந்துள்ளது.[2] இந்த படம் தேசிய அளவில் இவருக்கு புகழையும் ஈட்டித் தந்தது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இந்தியாவை சித்தரிக்கும் விதத்திற்கு தனது எதிர்ப்பை தனது வலைப்பதிவில் பதிவு செய்திருந்த அமிதாப் பச்சன், 2009 ஜனவரியில் நடந்த ஜெய்பூர் இலக்கிய விழாவில் பூக்குட்டி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறித்த தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். “இந்த படத்தில் ஒலிப் பொறியாளராக பணியாற்றியுள்ள இந்தியரான ரெசுல் ஏ.ஆர். ரஹ்மான் உடன் இணைந்து விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.”[7] திருவனந்தபுரத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் பூக்குட்டி பின்வருமாறு கூறினார்: “இந்த பரிந்துரைக்குப் பிறகு மும்பையில் இருந்து நான் பெற்ற முதல் அழைப்புகளில் ஒன்று அமிதாப் பச்சனுடையது. நான் ஒரு இந்தியன் என்பதில் அவர் மிகுந்த பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார். லட்சக்கணக்கான இந்தியர்கள் உங்களின் இந்த ஒரு தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறார்கள் என்று நான் அவரிடம் கூறினேன்.”[8] தனது சாதனையில் மலையாளப் படங்களின் பங்களிப்பு குறித்து பூக்குட்டி பின்வருமாறு குறிப்பிட்டார்: ”பிளாக் திரைப்படம் வரும் வரை ஒலி வடிவமைப்பும் கலவையும் இந்தி திரையுலகில் ஒரு பெரிய தயாரிப்பு வேலையாக கருதப்பட்டிருக்கவில்லை. ஆனால் நான் அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பாத்தயம், அரவிந்தனின் கும்மாட்டி, பூக்குவெயில் மற்றும் தம்பு ஆகிய திரைப்படங்களை எல்லாம் பார்த்து, அவற்றில் எல்லாம் கலாச்சாரத்தை நுட்பமாய் வெளிப்படுத்துவதற்கு ஒலி எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து வளர்ந்தவன்... இந்த படங்களில் எல்லாம் தேவதாசும் கிருஷ்ணன்உன்னியும் எவ்வளவு உண்மையாக உழைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களது வேலையின் தொடர்ச்சி தான் என்னுடையது. தொழில்நுட்பத்தை அழகியலோடு எவ்வாறு கலப்பது என்பதை அவர்கள் தான் எனக்குக் கற்றுத் தந்தனர்.”[8]

அகாதமி விருதினைப் பெற்று அவர் பேசியது:
“என்னால் நம்ப முடியவில்லை. அன்பார்ந்த பெருமக்களே..... நான் இப்போது இரண்டு மாயவித்தைக்காரர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மும்பையின் வெகு சாதாரண இரைச்சல் ஒலிகளை ஸ்லம்டாக் மில்லியனர் என்னும் மனதை உலுக்கும் கலைப் படைப்பாக அவர்கள் மாற்றிக் காட்டியிருக்கின்றனர். ஒரு பிரபஞ்ச வார்த்தையை உலகுக்கு அளித்த ஒரு நாட்டில் இருந்தும் நாகரிகத்தில் இருந்தும் நான் வருகிறேன். மவுனத்தில் துவங்கி கூடுதலான மவுனத்தில் முடியும். ’ஓம்’ என்பது தான் அந்த வார்த்தை. இந்த விருதை என் நாட்டுக்கு நான் சமர்ப்பிக்கிறேன். அகாதமிக்கு நான் நன்றி கூறுகிறேன். இது வெறும் ஒலிக்கான விருது அல்ல, எனது சரித்திரம். எனது ஆசிரியர்கள், டேனி போயில், கிறிஸ்டியன் கோல்சன்,பால் ரிட்சி, பிரவேஷ் மற்றும் இந்த படத்தில் பங்களித்த ஒவ்வொருவருக்கும், கிளென் ஃப்ரீமேண்டில் மற்றும் அனைத்து ஒலிக் கலவை கலைஞர்களுக்கும் எனது உண்மையான ஆழமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். நன்றி அகாதமி. மிகவும் நன்றி.”[9]

சொந்த வாழ்க்கை[தொகு]

பூக்குட்டியின் மனைவியின் பெயர் ஷாடியா. ரயான் என்கிற ஒரு மகனும் சல்னா என்னும் ஒரு மகளும் இத்தம்பதிக்கு உள்ளனர்.[10]

விருதுகள்[தொகு]

திரை சரிதம்[தொகு]

! (2000) (ADR கலவை) (ஒலி வடிவமைப்பாளர்)

  • ஸ்பிளிட் வைட் ஓபன் (1999) (ADR கலவை) (ஒலி வடிவமைப்பாளர்)
  • பிரைவேட் டிடெக்டிவ்: டூ பிளஸ் டூ பிளஸ் ஒன் (1997) (ஒலி)

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

  1. It's been an unbelievable ride' தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, January 24, 2009.
  2. 2.0 2.1 2.2 2.3 "Resul - the other Indian Oscar nominee". NDTV Movies. பார்த்த நாள் 23 January 2009.
  3. 3.0 3.1 3.2 K.K. GOPALAKRISHNAN. "Directing sound". The Hindu. பார்த்த நாள் 23 January 2009.
  4. இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை
  5. Tough journey for sound wizard Resul Pookutty எகானாமிக் டைம்ஸ் , பிப்ரவரி 24, 2009.
  6. 6.0 6.1 6.2 indiabroadcast. "Resul Pookutty makes films worth listening". Yahoo Movies India. பார்த்த நாள் 23 January 2009.
  7. Indo-Asian News Service (January 23, 2009). "Big B takes a u-turn on Slumdog Millionaire". NDTV. பார்த்த நாள் 30 January 2009.
  8. 8.0 8.1 Ashraf Padanna (30 January, 2009). "Sound technician dedicates Oscar nomination to Malayalam films". Gulf Times. பார்த்த நாள் 30 January 2009.
  9. Rajaneesh Vilakudy (23 Feb, 2009). "I dedicate this award to my country". Rediff.com. பார்த்த நாள் 23 Feb 2009.
  10. [1]
  11. "Nobel laureate Venky, Ilayaraja, Rahman, Aamir to receive Padma awards". The Hindu. http://beta.thehindu.com/news/national/article94584.ece. பார்த்த நாள்: 28 January 2010. 
  12. "Slumdog gets 10 Oscar noms". Rediff News. பார்த்த நாள் 23 January 2009.
  13. "["http://blog.taragana.com/e/2009/12/04/resul-pookutty-wins-chakkulathamma-swaravarsha-puraskaram-66879/ Chakulathamma Swarvarsha Puraskaram for Resul]".
  14. "Bahadur Award 2009 for Resul".
  15. ரெசுல் பூக்குட்டி நியூயார்க் டைம்ஸ் .
"http://ta.wikipedia.org/w/index.php?title=ரெசுல்_பூக்குட்டி&oldid=1603758" இருந்து மீள்விக்கப்பட்டது