ருக்மணி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ருக்மணி தேவி
ருக்மணி தேவி.jpg
சிங்கள நடிகை,பாடகி ருக்மணி தேவி
பிறப்பு 1923, ஜனவரி 15
நுவரெலியா
இறப்பு 1978, செப்டம்பர் 25
பணி நடிகை, பாடகி
துணை பி.ஏ.டபிள்யூ. ஜெயமன்னா


ருக்மணி தேவி (ஜனவரி 15, 1923 - செப்டம்பர் 25, 1978) ஒரு சிங்களத் திரைப்பட நடிகையாவார். ஆடல், பாடல், நடிப்பு எனப் பல்துறை ஆளுமையின் காரணமாக வெள்ளித்திரையின் நாயகி எனப் போற்றப்படுகிறார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

ஜோன். டி. டானியல், ஹெலன்ரோஸ் தம்பதியருக்கு இரண்டாவது மகளாக நுவரெலியாவில் பிறந்தார். இவரின் தந்தையார் கொழும்புச் செட்டி சமுகத்தை சேர்ந்தவராவார். தனது ஆரம்பப் படிப்பை கொழும்பு மத்தியூ பாடசாலையிலும், பின்னர் வெள்ளவத்தை கிளார்க் பாடசாலையிலும் பயின்றார்.

[தொகு] நடிப்புலகில்

தனது 13 வது வயதிலே பள்ளி மேடை நாடங்களிலே கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார், இதன் மூலம் இசைத் தொகுப்பிற்குப் பாடும் வாய்ப்பையும், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். 1947 ல் வெளிவந்த முதல் சிங்கள திரைப்படமான கடவுன பொறந்துவ வில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கி 84 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். இவற்றில் சில தமிழ் திரைப்படங்களும் அடங்கும். பி.ஏ.டபிள்யூ. ஜெயமன்னா எனும் திரைப்படத் தயாரிப்பாளரை திருமணம் புரிந்தார்.

[தொகு] மறைவு

1978 ம் ஆண்டு செப்டம்பர் 25 இல் துடெல்ல என்னுமிடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்தார். இவர் உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலை இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இவர் வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியகமாகப் பராமரிக்கப்படுகிறது.

[தொகு] வெளி இணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ருக்மணி_தேவி&oldid=670146" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்