த. மு. சபாரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரி. எம். சபாரத்தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரி. எம். சபாரத்தினம்
T. M. Sabaratnam
இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1924–1931
பின்னவர்பேரா. செ. சுந்தரலிங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1895-01-16)16 சனவரி 1895
முல்லைத்தீவு
இறப்பு23 சனவரி 1966(1966-01-23) (அகவை 71)
முல்லைத்தீவு
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
துணைவர்வாலாம்பிகை அழகம்மா
பிள்ளைகள்புலேந்திரா சபாரத்தினம்,
சகுந்தலா நல்லையா
தொழில்வழக்கறிஞர்

தம்பையா முதலியார் சபாரத்தினம் (Thambaiyah Mudaliyar Sabaratnam, 16 சனவரி 1895 - 23 சனவரி 1966) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினராக 1924 முதல் 1931 வரை வட மாகாணத்தின் கிழக்குப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ரி. எம். சபாரத்தினம் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்று, பின்னர் சட்டக் கல்வியை கொழும்பு சட்டக் கல்லூரியில் முடித்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[2] வாலாம்பிகை அழகம்மா என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ராசக்கோன் புலேந்திரா, சகுந்தலா நல்லையா என்ற இரு பிள்ளைகள்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1924 தேர்தலில் இலங்கை சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராக வட மாகாணத்தின் கிழக்குப் பகுதிக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இப்பதவியை அவர் 1931 ஆம் ஆண்டு வரை வகித்து வந்தார். பின்னர் 1947 நாடாளுமன்றத் தேர்தல்[4], மற்றும் 1952 தேர்தல்களில்[5] அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வவுனியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

சமூகப் பணி[தொகு]

சபாரத்தினம் இலங்கை இராமகிருஷ்ண மடத்தின் நிருவாக உறுப்பினராகவும்[6] பின்னர் வற்றாப்பளை அம்மன் கோவில் அறங்காவல் தலைவராகவும் சேவையாற்றினார்.[7]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajasingham, K. T. "SRI LANKA: THE UNTOLD STORY: Chapter 5: Political polarization on communal lines" பரணிடப்பட்டது 2001-10-25 at the வந்தவழி இயந்திரம், ஏசியா டைம்ஸ், செப்டம்பர் 8, 2001
  2. law/nlr/common/html/NLR53V472.htm VELUPILLAI et al v PULENDRA et al[தொடர்பிழந்த இணைப்பு], S. C. 462-D. C. Vavuniya, 831 (law case report)
  3. Sabaratnam, T., Sri Lankan Tamil Struggle, Struggle 19.php?uid=4171 Chapter 19: "The Birth and Death of the Jaffna Youth Congress"[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-12-08.
  5. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-12-08.
  6. process.php?chapterid=1956Y10V344C&sectionno=4&title=RAMAKRISHNA%20MISSION%20&path=3 Article 4[தொடர்பிழந்த இணைப்பு], Ramakrishna Mission (Ceylon Branch) Ordinance
  7. வற்றாப்பளை அம்மன் கோவில் வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._மு._சபாரத்தினம்&oldid=3556882" இலிருந்து மீள்விக்கப்பட்டது