ரிஷ்யசிருங்கர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிஷ்யசிருங்கர்
இயக்கம்எஸ். சௌந்தரராஜன்
தயாரிப்புதமிழ்நாடு டாக்கீஸ்
இசைஷர்மா பிரதர்ஸ்
நாகைய்யா குழுவினர்
நடிப்புரஞ்சன்
எஸ். பாலச்சந்தர்
ஜி. பட்டு ஐயர்
வசுந்தரா தேவி
குமாரி ருக்குமணி
வெளியீடுஆகத்து 2, 1941
நீளம்15500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரிஷ்யசிருங்கர் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எஸ். பாலச்சந்தர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். நியூடோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட இப்படப் பாடல்களை இயற்றியவர் பாபனாசம் ராஜகோபால் ஐயர்.

பாத்திரங்கள்[தொகு]

ரிஷ்யசிருங்கர் திரைப்படத்தில் நடிததவர்களும், அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரங்களும்:[1]

நடிப்பு பாத்திரம்
எஸ். பாலச்சந்தர் பால ரிஷ்ய சிருங்கன்
ரஞ்சன் ரிஷ்ய சிருங்கர்
ஜி. பட்டு ஐயர் விபாண்டகர்
டி.ஈ.கிருஷ்ணமாச்சாரியார் ரோமபாத ராஜன்
கே.என்.ராமமூர்த்தி ஐயர் கௌதமர்
ஆர்.கே.ராமசாமி சுதேவர்
ஆர்.பி.யக்னேஸ்வர ஐயர் பௌத்தாயனர்
எம்.எஸ்.முருகேசம் மாரீசன்
டி.வி.சேதுராமன் சுபாகு
வசுந்தரா தேவி மாயா
குமாரி முரளி சாந்தா
குமாரி ருக்மணி பத்மினி
வி.எம்.பங்கஜம் ஊர்வசி
கே.என்.கமலம் சுதேவி

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்தில் வரும் பாடல்களை இயற்றியவர் பாபனாசம் ராஜகோபால் ஐயர்.[1]

  • புண்ய ஸ்வரூபனே வா (ஊர்வசி)
  • சுப்ரஜோதி சூரியனிதோ (பால சிருங்கன், மாண்டு ராகம்)
  • என்னருமை மானே உன்னுடனே நானே (பால சிருங்கன், பிலாவல் ராகம்)
  • பாபாபகாரி துரிதாரி தரங்கதாரி (பாலசிருங்கன், பீம்ப்ளாஸ் ராகம்)
  • இதுவுமென் புண்ணியமே (பாலசிருங்கன், திலாங் ராகம்)
  • அந்த நாள் முதலாக (மாயா, வள்ளிக்கணவன் பேரை.. மெட்டு, செஞ்சுருட்டி ராகம்)
  • நேற்றந்தி நேரத்திலே நீராடும் கரைதனிலே (குழுவினர், உசேனி ராகம்)
  • ஆனந்தமே உன் காட்சி (மாயா, பைரவி ராகம்)
  • பூமியினிற் பூவையராய் பிறந்ததனால் பலனேதே (மாயா)
  • நானே பாக்கியவதி (மாயா, காபி ராகம்)
  • இங்கு நாரணரூபமே நாமுமாகும் (ரிஷ்யர்-மாயா, மாண்டு ராகம்)
  • யோகிகளே நீர் யாதிது செய்வீர் (ரிஷ்யர்-மாயா, யமுனா கல்யாணி)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ரிஸ்ய சிருங்கர் பாட்டுப் புத்தகம். ஆனந்த விகடன் பிரசு, மதராசு. 1941. 

உசாத்துணை[தொகு]