ரிள்வான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரிள்வான் (Ridwan, அரபு: رضوان) என்பது அரபு மொழியில் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. இசுலாமிய மரபுகளின் படி, ரிள்வான் என்பது ஜன்னா (சுவர்க்கத் தோட்டம்) அல்லது சொர்க்கத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள மலக்கின் பெயர் ஆகும். இது "ரிஸ்வான்" அல்லது "ரித்வான்" அல்லது "ரிட்வான்" அல்லது துருக்கிய மொழியில் "ரிட்வான்", பொசுனியம், பாரசீகம், உருது, பஷ்தூ, தாஜிக்கு, பஞ்சாபி, காஷ்மீரி மொழிகளைப் போல உச்சரிக்கப்படுகிறது. "Redouane" என்று பிரெஞ்சில் உச்சரிக்கப்படுகிறது. மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் "ரிடுவான்" என்று உச்சரிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் இந்தப் பெயர் பொதுவாக அரேபியர்களால் அல்லது முஸ்லிம்களால் ஓர் ஆண்பாற் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிள்வான்&oldid=1364438" இலிருந்து மீள்விக்கப்பட்டது