ரிம்ஸா முஹம்மத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரிம்ஸா முஹம்மத்
பிறப்பு ஏப்ரல் 20, 1978
மாத்தறை, வெலிகம
பெற்றோர் முஹம்மத், லரீபா

ரிம்ஸா முஹம்மத் (பி. ஏப்ரல் 20, 1978) கவிதாயினி வெலிகம ரிம்ஸா, வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில் ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஒரு இலங்கை எழுத்தாளரும், கவிஞருமாவார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

மாத்தறை மாவட்டம் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மத், லரீபா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியான இவர் வரகாப்பொளை பாபுல் ஹஸன் மத்திய மகாவித்தியாலயம், வெலிகம அறபா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவியாவார். கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராக தொழில் புரிந்து வருகிறார்.

[தொகு] இலக்கிய ஈடுபாடு

1998ம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறை ஈடுபாடு கொண்டுள்ள ‘ரிம்ஸா’ வின் கன்னி ஆக்கம் ‘சமாதானமே வா’ எனும் தலைப்பில் சூரியன் FM இல் இடம்பெற்றது. அன்றிலிருந்து 180 கவிதைகளையும், 25 கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

[தொகு] பிரசுரமான ஊடகங்கள்

வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, இருக்கிறம், நவமணி, விடிவெள்ளி, எங்கள் தேசம், ரோஜா, தினமுரசு, ஜனனி, ஓசை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அஸ்ஸகீனாஹ், அல் ஹஸனாத், அல்லஜ்னா, தூது, ஞானம், நீங்களும் எழுதலாம், வேகம், பேனா, இனிய நந்தவனம் (இந்திய சஞ்சிகை)

[தொகு] வானொலி, தொலைக்காட்சிகளில்

சூரியன் எப்.எம்., சக்தி எப்.எம்., பிறை எப்.எம், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் நேத்ரா அலைவரிசையில் கவிதை கூறியிருப்பதுடன் 2010.01.20 ம் அன்று இவரது நேர்காணலும் நேத்ரா அலைவரிசையில் இடம் பெற்றது. சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக (2004 - 2005) இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பிரதிகள் தயாரித்தும் நேரடியாக குரல் கொடுத்துமுள்ளார். DAN தொலைக்காட்சியில் 2011.03.23 ம் அன்று இவரது நேர்காணல் இடம் பெற்றது.

[தொகு] வெளியிட்டுள்ள நூல்கள்

  • கணக்கீட்டுத்துறையில் வங்கிக்கணக்கிணக்கக் கூற்று, ISBN 955-8409-09-X
  • கணக்கீட்டுச் சுருக்கம், ISBN 978-955-8741-37-5
  • கணக்கீட்டின் தெளிவு ISBN 955-50020-2-9
  • தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு) ISBN 978-955-1810-10-8

[தொகு] பூங்காவனம்

தற்போது BEST QUEEN FOUNDATION என்ற இலக்கிய அமைப்பின் தலைவராக இருக்கும் இவர் 'பூங்காவனம்' காலாண்டு சஞ்சியின் பிரதம ஆசிரியராகவும் சேவையாற்றி வகிக்கின்றார்.

[தொகு] பெற்றுள்ள விருது

இவரது சமூக சேவை, கலை இலக்கியப் பணிகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரிம்ஸா_முஹம்மத்&oldid=905854" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி