ரிச்சர்ட் டாக்கின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


இக்கட்டுரை ( அல்லது இதன் ஒரு பகுதி ) தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத்தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
ரிச்சர்ட் டாக்கின்ஸ்
Dawkins at UT Austin 2.jpg
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் டாக்கின்ஸ், மார்ச் 2008
பிறப்பு மார்ச் 26 1941 (வயது 68)
பிறப்பிடம் நைரோபி, கென்யா, பிரித்தானியப் பேரரசு
வாழிடம் ஆக்ஸ்ஃபர்ட், இங்கிலாந்து
தேசியம் பிரித்தானியர்
பல்கலைக்கழகம் Balliol College, Oxford
ஆய்வு நெறியாளர்   நிக்கலாஸ் டின்பேர்கன்
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்  
அலன் கிராபன்
மார்க் ரிட்லி
உணர் இறைமறுப்பாளர், rationalism
சமய எதிர்ப்பு
Gene-centred view of evolution
Introduction of meme concept
பிற குறிப்பு Fellow of the Royal Society
Fellow of the Royal Society of Literature

கிளின்ரன் ரிச்சார்ட் டாக்கின்ஸ் (Clinton Richard Dawkins; பிறப்பு: மார்ச் 26, 1941) பரவலாக அறியப்பட்ட ஒரு படிவளர்ச்சி உயிரியலாளர். இவரது The Selfish Gene (1976) நூல்படிவளர்ச்சி கொள்கை பற்றிய ஒரு பரந்த அறிதலுக்கு மிக்க உதவியது. இவர் உயிரியல் துறையிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.

சமூக மானிடவியல் துறைக்கும் பரிணாம மானிடவியல் துறைக்குமான உரையாடல்களில் இவரது கருத்துக்கள் பரிணாம மானிடவியல் சார்ந்தே முன்வைக்கப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டில் டாக்கின்ஸ் எழுதிய The God Delusion என்ற நூல் பெரும் விவாதத்தை உருவாக்கியது. அதில் அவர் 'மீம்' என்ற கருதுகோளை அறிமுகப்படுத்துகிறார். Unit of Cultural Transmission என்னும் விடயம் எவ்வாறு பரம்பரையாக ஒரே சமூகக்கூறுகளை அல்லது பொதுப்பண்புகளை உடைய சமூகப்பரப்புகளை ஆழ்கின்றது என்பது இவரது வாதம். ஜீன்களுக்கு சமாந்தரமாக- இன்னும் அதற்கு மேலாக- உருவகப்படுத்தப்பட்ட இக்கருதுகோள் தொடர்பான விவாதம் அறிவுஜீவிகள் மத்தியில் பல காலங்கள் தொடர்ந்தது.

ஏற்கனவே உளவியல் வல்லுநர்களான யூங் போன்றோரால் கூறப்பட்ட மரபணுவியல் உளப்பகுப்பாய்வு என்னும் கருதுகோள் இதுசாரப்பட்டதே. இனம் சார் கருத்தியல்களும் மதம்சார் கருத்தியல்களும் இதனூடு கடத்தப்படுகின்றன என்பது இவரது வாதம்.

சமூக மானிடவியலாளர்களை மேவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட கருதுகோளே மீம் என்ற கருத்து டாக்கின்ஸ் பற்றிய விமர்சனங்களில் கூறப்படுகின்றது.

இவர் ஒரு இறைமறுப்பாளர். இறைமறுப்புக்கு ஆதரவாகவும் தீவரமாக செயற்படுபவர்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்