ரா. தாமரைக்கனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரா. தாமரைக்கனி | |
|---|---|
| பிறப்பு | அக்டோபர் 19, 1946 தமிழ்நாடு, இந்தியா |
| இறப்பு | செப்டம்பர் 15 2005 (அகவை 58) |
| பணி | தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் (ஐந்து முறை: 1977-1980, 1980-1984, 1984-1989, 1991-1996, 1996-2001) |
| பெற்றோர் | ராமசாமி மற்றும் சண்முகத்தாய் |
| வாழ்க்கைத் துணை | தேவகி |
| பிள்ளைகள் | நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் |
ரா. தாமரைக்கனி (அக்டோபர் 19, 1946 - செப்டம்பர் 15 2005) தமிழக அரசியல்வாதி. இவர் ஐந்து முறை திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர் தலைமையில் மூன்றுமுறையும், சுயேட்சையாக ஒருமுறையும், மீண்டும் அ.தி.மு.க சார்பாக ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல ஆண்டுகாலம் அதிமுகவிலும் சில ஆண்டுகள் திமுகவிலும் உறுப்பினராக இருந்தார். இவரது மகன் இன்பத்தமிழன் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1]
மேற்கோள் [தொகு]
- ↑ "திருவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. தாமரைக்கனி காலமானார்". The Hindu. 16 June 2001. http://www.hindu.com/2005/09/15/stories/2005091505130500.htm.