ராம் பரன் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராம் பரன் யாதவ்
Ram Baran Yadav
रामवरण यादव

2008 இல் யாதவ்.

நேபாளத்தின் 1வது குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 சூலை 2008
பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா
பிரசந்தா
மாதவ் குமார் நேபாள்
சாலா நாத் கனால்
உதவி தலைவர் பார்மானந்த் ஜா
முன்னவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா (பதில்)
அரசியல் கட்சி நேப்பாளி காங்கிரஸ்

பிறப்பு 4 பெப்ரவரி 1948 (1948-02-04) (அகவை 66)
சப்பாகி, நேபாளம்
பயின்ற கல்விசாலை கல்கத்தா பல்கலைக்கழகம்
சமயம் இந்து

டாக்டர் ராம் பரன் யாதவ் (Dr. Ram Baran Yadav; நேபாள மொழி: रामवरण यादव) நேபாளத்தின் முதலாவதும் தற்போதைய அதிபரும் ஆவார். இவர் நேப்பாளி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார்[1]. ஜுலை 21, 2008 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் யாதவ் சட்டசபையின் 590 உறுப்பினர்களில் 308 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றார்[2].

2008 இல் இடம்பெற்ற சட்டசபைக்கான தேர்தல்களில் யாதவ் தனுசா மாவட்டத்தில் போட்டியிட்டு 10,932 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்[3]. 1999 இல் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்[4][5].

இவர் ஒரு மருத்துவப் பட்டதாரி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_பரன்_யாதவ்&oldid=1372228" இருந்து மீள்விக்கப்பட்டது