டி. கே. ராமமூர்த்தி
| டி. கே. இராமமூர்த்தி | |
|---|---|
![]() டி. கே. இராமமூர்த்தி
|
|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி |
| பிறப்பு | 1922 |
| பிறப்பிடம் | திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம் |
| இறப்பு | ஏப்ரல் 17 2013 |
| தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
| இசைக்கருவிகள் | விசைப்பலகை இசைக்கருவி ஆர்மோனியம் வயலின் |
| இசைத்துறையில் | 1950கள்-1970கள் |
டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி (Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, 1922 - 17 ஏப்ரல் 2013) தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால்.
சாது மிரண்டால், தேன் மழை, மறக்க முடியுமா, நான், தங்கச் சுரங்கம், காதல் ஜோதி, ஆலயம், சோப்பு சீப்பு கண்ணாடி, சங்கமம் உள்ளிட்ட 19 படங்களுக்கு தனியாகவும், விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
மறைவு [தொகு]
இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார். [1]
மேற்கோள்கள் [தொகு]
- Down melody lane... from The Hindu, newspaper
- Conversations with M.S.V
