ராஜ் நெட்வொர்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராஜ் தொலைக்காட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ராஜ் நெட்வொர்க் | |
|---|---|
| ஒளிபரப்பு ஆரம்பம் | 1994 |
| உரிமையாளர் | ராஜ் டெலிவிசன் நெட்வொர்க் (பி) லிமிடெட் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம் |
| தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
| வலைத்தளம் | rajtvnet.in |
ராஜ் தொலைக்காட்சி பிணையம், இந்திய மாநிலமான தமிழகத்திலிருந்து, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேரப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.
ராஜ் தொலைக்காட்சி முழுக்குடும்பத்திற்கும் பன்முக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தரும் நோக்கத்துடன் 1994ஆம் ஆண்டு தனது ஒளிபரப்பைத் துவக்கியது. இந்தப் பிணையத்தின் அங்கமாக உள்ள அலைவரிசைகள் பல நெடுந்தொடர்கள், உரையாடல் நிகழ்வுகள், இசைப்போட்டிகள் மற்றும் விளையாட்டு நிகழ்நிலை காட்சிகள் என ஒளிபரப்பி வருகிறது. மேலும் பழமையான தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களின் சிறந்த திரைப்படங்களை தனது காப்பகத்தில் கொண்டிருப்பது இந்தத் தொலைக்காட்சியின் சிறப்பாகும்.
பிணையம் [தொகு]
இந்தப் பிணையத்தில் அங்கம் பெறும் அலைவரிசைகள்:
| தொலைக்காட்சி அலைவரிசைகள் | |||||
|---|---|---|---|---|---|
| வகை | தமிழ் | தெலுங்கு | கன்னடம் | மலையாளம் | இந்தி |
| மனமகிழ் அலைவரிசைகள் | ராஜ் தொலைக்காட்சி | விஸ்ஸா | - | - | ராஜ் பரிவார் |
| இசை அலைவரிசைகள் | ராஜ் மியூசிக்ஸ் (தமிழ்) | ராஜ் மியூசிக்ஸ் (தெலுங்கு) | ராஜ் மியூசிக்ஸ் (கன்னடம்) | ராஜ் மியூசிக்ஸ் (மலையாளம்) | |
| திரைப்பட அலைவரிசைகள் | ராஜ் டிஜிட்டல் பிளசு | - | - | - | |
| செய்தி அலைவரிசைகள் | ராஜ் செய்தி 24X7 | ராஜ் நியூஸ் | - | - | |
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||||||||||||||||||||