ராஜேந்திர அக்ரவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜேந்திர அக்ராவால், இந்திய அரசியல்வாதி ஆவர். இவர் பதினாறாவது மக்களவையில், உத்தரப் பிரதேசத்திலுள்ள மீரட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் 1949-ஆம் ஆண்டில் அக்டோபர் இரண்டாம் நாளில் பிறந்தார். உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தின் பில்குவா என்னும் ஊரில் பிறந்தவர்.[2] இவர் உமா அக்ராவால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். காசியாபாத்தில் உள்ள மோதி நகரில் எம். எம். கல்லூரியில் பயின்றார்.[2]

அரசுப் பதவிகள்[தொகு]

  • 2009ஆம் ஆண்டுத் தேர்தலில் பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[2]
  • 31 ஆகஸ்டு 2009 - தகவல் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்.
  • 20 ஜூலை 2009 - ஆட்சி மொழிக்கான பாராளுமன்றக் குழுவின் உறுப்பினர்
  • 16 செப்டம்பர் 2009 - ரயில்வே அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினர்
  • 23 செப்டம்பர் 2009 - விண்ணப்பக் குழுவின் உறுப்பினர்
  • 2014 - பதினாறாவது மக்களவையின் உறுப்பினர் ஆனார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. "15th Lok Sabha". இந்தியப் பாராளுமன்றத்தின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014. 
  2. 2.0 2.1 2.2 2.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2014-09-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேந்திர_அக்ரவால்&oldid=3569770" இலிருந்து மீள்விக்கப்பட்டது