ரவிச்சந்திரன் அசுவின்
| ரவிச்சந்திரன் அஷ்வின் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ரவிச்சந்திரன் அஸ்வின் | |||
| பட்டப்பெயர் | டடா | |||
| பிறப்பு | 17 செப்டம்பர் 1986 | |||
| சென்னை, தமிழ் நாடு, இந்தியா | ||||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | நவம்பர் 6 2011: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 185) | சூன் 5 2010: எ இலங்கை | |||
| சட்டை இல. | 99 | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 2006/07-2011 | தமிழ் நாடு | |||
| 2008-2011 | சென்னை சுப்பர் கிங் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 2 | 20 | 36 | 61 |
| ஓட்டங்கள் | 107 | 116 | 1174 | 542 |
| துடுப்பாட்ட சராசரி | 53.50 | 19.33 | 34.52 | 21.68 |
| 100கள்/50கள் | 1/– | –/– | 2/7 | –/2 |
| அதிக ஓட்டங்கள் | 103 | 38 | 107* | 79 |
| பந்து வீச்சுகள் | 615 | 1087 | 9109 | 3249 |
| இலக்குகள் | 13 | 35 | 147 | 83 |
| பந்துவீச்சு சராசரி | 24.15 | 24.57 | 27.77 | 28.24 |
| சுற்றில் 5 இலக்குகள் | 1 | – | 12 | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | n/a | 3 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 6/47 | 3/24 | 6/47 | 3/24 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | –/– | 3/– | 15/– | 18/– |
|
நவம்பர் 22, 2011 தரவுப்படி மூலம்: [1] |
||||
ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin, பிறப்பு செப்டம்பர் 17, 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். வலதுகை மட்டையாளரும் வலதுகை சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஆடுகிறார். இவரும், இலங்கையைச் சேர்ந்த அஜந்த மென்டிஸ் மட்டுமே தற்போது கேரம் பால்(carrom ball) எனப்படும் வகையான சுழற்பந்தை வீசும் திறன் கொண்டவர்கள். 2011 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 36 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 61 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2011 ல், இந்தியத் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2010/11 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
ஆட்ட வாழ்வு [தொகு]
தமிழ்நாடு துடுப்பாட்ட அணியின் பன்முக துடுப்பாட்டக்காரரான அஸ்வின் முதல்தர துடுப்பாட்டத்தில் விதர்பா அணிக்கு எதிராக சிறந்த பந்துவீச்சு புள்ளிகளாக 6/64 எடுத்துள்ளார். இருபது20 துடுப்பாட்டத்தில் ஆந்திராவிற்கு எதிராக தமது ஆட்டத்தைத் துவங்கினார். தகவல் தொழில்நுட்பத்தில் தொழில்நுட்ப பட்டம் (பி.டெக்) பெற்றுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் 2010ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெல்ல இவரது 3/16 (4 பந்து பரிமாற்றங்கள்) பெரிதும் உதவ, ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஒருநாள் துடுப்பாட்டத்தில் சூன் 5, 2010 அன்று இலங்கையுடன் தமது ஆட்டவாழ்வைத் துவங்கினார். அஸ்வின் 32 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்தும் அந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்றது.
2010 சாம்பியன்ஸ் லீக் இருபது20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி மிக கூடுதலான விக்கெட்களை வீழ்த்தினார்; 13 விக்கெட்களை பெற்றதற்காக போட்டியின் சிறந்த துடுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கோல்டன் விக்கெட் பரிசும் பெற்றார்.
மேற்கிந்திய அணிகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் துடுப்பாட்டத்தின் போது 103 ஓட்டங்களைப் பெற்று நவம்பர் 25, 2011.இல் தனது கன்னிச் சதத்தைப் பெற்றுக்கொண்டார். அறிமுகமாகிய முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் (நவம்பர் ஆறு - 10, 2011.) ஒன்பது விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின், தனது 3வது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் (நவம்பர் 25, 2011.) அடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் எடுத்த 3வது இந்தியர் அஸ்வின் ஆவார். இதற்கு முன்பு வினோ மன்கட், பாலி உம்ரிகர் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். 1952ல் மங்கட்டும், 1962ம் ஆண்டு உம்ரிகரும் இந்த சாதனையைச் செய்தனர்.
மேற்கோள்கள் [தொகு]
- கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ரவிச்சந்திரன் அசுவின்
| 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி | ||
| கவுதம் கம்பீர் | வீரேந்தர் சேவாக் | யுவராஜ் சிங் | சுரேஷ் ரைனா | மகேந்திர சிங் தோனி | சச்சின் டெண்டுல்கர் | விராட் கோலி | நேரா | ஸ்ரீசாந்த் | ஹர்பஜன் சிங் | பதான் | பட்டேல் | ஜாகிர் | பியூஷ் சாவ்லா | அசுவின் | பயிற்றுனர் கிர்ஸ்டன் | ||
|
|||||