ரத்னதீப விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரத்னதீப விருது இலங்கையில் கண்டி மாவட்டத்தை மையமாகக் கொண்டு தேசிய அளவில் புகழ்பெற்று விளங்கும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் திறமைமிக்க மாணவர்கள், ஆசிரியர்களை இன, மத, பால் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சிறப்புபடுத்தும் முகமாக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் ஒரு விருதாகும்.

ரத்னதீப பதனம[தொகு]

இந்த விருதினை வழங்குவது “ரத்னதீப பதனம” எனும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும். இந்த அமைப்பின் நிறுவனரும், முதன்மை அமைப்பாளரும் ராஜா ஜென்கின்ஸ் என்பவராவார். “ரத்னதீப பதனம” மலைய கலை கலாசார சங்கம், காமினி பொன்சேகா ஞாபகார்த்தமன்றம், ஏ. எம். ராஜா ஞாபகார்த்த மன்றம் ஆகிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்னதீப_விருது&oldid=995023" இலிருந்து மீள்விக்கப்பட்டது