ரண்விஜய் சிங்
| Rannvijay Singh | |
|---|---|
| இயற் பெயர் | Rannvijay Singh Singha [1] |
| பிறப்பு | மார்ச்சு 16, 1983 |
| தொழில் | Actor, VJ |
எம்டிவி ரோடீஸ் (2003) என்ற நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளரே ரண்விஜய் சிங் ஆவார் (பிறப்பு 16 மார்ச், 1983). அந்த நிகழ்ச்சியில் தற்போது இவர் பணிபுரிந்து, இயக்கி வழங்கி வருகிறார். மேலும் இவர் எம்டிவி இந்தியாவின் வி.ஜே ஆகவும் இருந்து வருகிறார்[3][2].
பொருளடக்கம் |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கேரியர்[தொகு]
ரண்விஜய் சிங்கின் தந்தை ராணுவத்தைச் சேர்ந்தவர், மேலும் இவருடைய தம்பி கப்பற்படையில் பணிபுரிகிறார்[2][4]. டெல்லி பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஹன்ஸ் ராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். முதலில் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில் ஒரு கட்டுமான தொழிலாளராக பணிப்புரிந்தார்.[3][3]
எம்டிவி கேரியர்[தொகு]
பிரபலமான ரியாலிட்டி ஷோவான எம்டிவி ரோட்டீஸ் என்பதன் சீசன் ஒன்றின் வெற்றியாளார். பின்னர் அந்த நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.
மேலும் அவர் எம்டிவி ஸ்கூட்டி பெப் டீன் திவா என்ற நிகழ்ச்சியையும் எம்டிவி ஸ்பில்ட்ஸ்வில்லா என்ற நிகழ்ச்சியின் முதல் சீசனையும் தொகுத்து வழங்கியுள்ளார். விரைவில் அவர், எம்டிவி ஃபோர்ஸ் இந்தியா - தி ஃபாஸ்ட் அண்ட் தி கார்ஜியஸ் என்ற மற்றொரு எம்டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.
டாஸ் மற்றும் மும்பை கட்டிங்... ஏ சிட்டி அன்ஃபோல்ட்ஸ் ஆகியவற்றில் ஒரு நடிகராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது விபுல் ஷாவின் லண்டன் ட்ரீம்ஸ் என்ற திரைப்படத்தில் சல்மான் கான், அசின் தோட்டும்கல், அஜய் தேவ்கன் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.[4][5]
குறிப்புதவிகள்[தொகு]
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedex - ↑ [4] ^ ரண்விஜய் சிங் பேட்டி தி ஹிந்து, நவம்பர் 29, 2005.
- ↑ 3.0 3.1 ரண்விஜய் சிங்கின் சுயவிவரம் மற்றும் பேட்டி
- ↑ [6] ^ எம்டிவி எனக்கு ப்ரெட், திரைப்படங்கள் அதற்கு பட்டர்: ரண்விஜய் Sify.com, மே 15 , 2008.
- ↑ The big picture: VJ Rannvijay has his eyes set on Bollywood The Hindu, Jul 07, 2008.