ரகுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரகுவரன்
பிறப்பு திசம்பர் 11, 1958 (1958-12-11) (அகவை 55)[1]
கொல்லன்கோடு, பாலக்காடு மாவட்டம், கேரளா

இந்தியாவின் கொடி இந்தியா

இறப்பு மார்ச் 19, 2008
சென்னை, தமிழ்நாடு
துணைவர் ரோகினி (மணமுறிவு பெற்றவர்)

ரகுவரன் (டிசம்பர் 11, 1958 - மார்ச் 19, 2008) தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகன், குணச்சித்திர வேடங்களில் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். பி.ஏ. பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் வில்லன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். கடைசியாக அவர் நடித்து வெளியான தமிழ்ப் படம் சில நேரங்களில். இது தவிர இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

மறைவு[தொகு]

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார்[2]. நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.

நடித்த சில திரைப்படங்கள்[தொகு]

பாட்ஷா சம்சாரம் அது மின்சாரம் ஏழாவது மனிதன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "RajiniKanth.com - Bio-Data". பார்த்த நாள் 2007-04-05.
  2. நடிக‌ர் ரகுவர‌ன் காலமானா‌ர்

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரகுவரன்&oldid=1597710" இருந்து மீள்விக்கப்பட்டது