யொரூபா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யொரூபா
èdèe Yorùbá
 நாடுகள்: நைஜீரியா, பெனின், டோகோ மற்றும் பிற இடங்கள்
 பேசுபவர்கள்: 20 மில்லியன்களுக்கும் அதிகம் (Sachnine 1997 as cited in Ethnologue) 
நிலை: 49
மொழிக் குடும்பம்: நைகர்-கொங்கோ
 அத்லாந்திக்-கொங்கோ
  வோல்டா-கொங்கோ
   பெனூ-கொங்கோ
    டிஃபோயிட்
     யொரூபோயிட்
      எடெக்கிரி
       யொரூபா 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: நைஜீரியா
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: yo
ஐ.எசு.ஓ 639-2: yor
ISO/FDIS 639-3: yor 

யொரூபா மொழி என்பது மேற்கு ஆபிரிக்காவில் பேசப்படுகின்ற கிளைமொழித் தொடர்ச்சியைக் (dialect continuum) குறிக்கும். 22 மில்லியன் மக்கள் இம் மொழியைப் பேசுகிறார்கள். இது யொரூபா மக்களுடைய மொழி. இது நைஜீரியா, பெனின், டோகோ ஆகிய நாடுகளில் பேசப்பட்டுவருவதுடன், ஓகு என்ற பெயரில், பிரேசில், சியராலியொன் ஆகிய நாடுகளிலும், நாகோ (Nago) என்ற பெயரில் கியூபாவிலும் வாழும் சில சமுதாயத்தினரிடையிலும் சிறிதளவில் வழங்குகின்றது.

யொரூபா மொழி SVO தொடரமைப்புடன் கூடிய ஒரு பிரிநிலைத் (isolating) தொனி மொழியாகும் (tonal language).

மரபுவழியான யொரூபா நிலப்பகுதி, தற்போதைய, நைஜீரியாவின் தென்மேற்கு மூலை, பெனின் குடியரசு, டோகோ மற்றும் கானாவின் மையக்கிழக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. இப்பகுதி பொதுவாக யொரூபாலாந்து என அழைக்கப்படுகின்றது. இதில் அடங்கும் நைஜீரியப் பகுதி, தற்கால ஓயோ, ஓசுன், ஓகுன், ஒண்டோ, எக்கிட்டி, க்வாரா, லாகோஸ் ஆகிய மாநிலங்களையும், கோகி மாநிலத்தின் மேற்குப் பகுதியையும் உள்ளடக்கியது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=யொரூபா_மொழி&oldid=1347741" இருந்து மீள்விக்கப்பட்டது