யாவாசிகிரிப்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
JavaScript
Paradigm: Multi-paradigm: prototype-based, functional, imperative, scripting
உருவாக்கப்பட்ட வருடம்: 1995
உருவாக்கம்: Brendan Eich
விருத்தியாளர்: Netscape Communications Corporation, Mozilla Foundationவார்ப்புரு:Verify source
பிந்தைய வெளியீடு: 1.8 / 2008
Typing discipline: dynamic, weak, duck
பிராதன நடைமுறைப்படுத்தல்கள்: {{{நடைமுறைப்படுத்துவோர்கள்}}}
Dialects: JScript, JScript .NET
பிறமொழித்தாக்கங்கள்: Self, C, Scheme, Perl, Python, Java
இம்மொழியினால் ஏற்பட்ட தாக்கங்கள்: Objective-J

யாவாசிகிரிப்டு என்பது வலைத்தளங்களை வடிவமைக்க பரவலாகப் பயன்படும் ஒரு கணினி நிரல் மொழி ஆகும். பயனர் பக்க செயற்பாடுகள் யாவாசிகிரிப்டினால் பெரிதும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. 1995 ஆம் ஆண்டு நெற்சுகேப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொழிக்கு தற்போது மிகவும் விருத்தி பெற்ற மென்பொருள் கட்டமைப்புகள் உள்ளன. யேகுவெரி, மொடூல்சு, கூகிள் வலை கருவிப்பெட்டி போன்றவை பரவலான பயன்பாட்டில் இருக்கும் யாவாசிகிரிப்டு கட்டமைப்புகள். பெயரில் ஒத்த ஜாவா நிரல் மொழிக்கும் இதற்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

ஆரமபத்தில் நெட்சுகேப் நிறுவனத்தால் லைவ் சிகிரிப்டு என அறிமுகம் செய்யப்பட்ட மொழியையே யாவாசிகிரிப்டு என பெயர் மாற்றப்பட்டு அறிமுகப் படுத்தப் பட்டது. இந்தப் பெயரின் தெரிவே இன்னளவும் பல குழப்பங்களுக்குக் காரணமாக அமைந்தது. இப் பெயர் சண் மைக்ரோசிஸ்டத்தின் காப்புரிமைப் பெயராகும். பிற்காலத்தில் மைக்ரோசாப்ட் ஜாவாசிகிரிப்டிற்குப் போட்டியாக ஜெஸ்கிரிப்ட் என்ற நிரலாக்க மொழியை உருவாக்கியது.

[தொகு] யாவாவாஸ்கிரிப்டும் ஜாவாவும்

இதேவேளையில், சண் மைக்ரோ சிஸ்டம் (Sun Micro systems) ஜாவா (Java) என்ற மொழியை அறிமுகப்படுத்தியது. ஜாவா விரைவில் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக நெட்சுகேப் நிறுவனமும் தமது நெட்சுகேப் 2.0 பதிப்பில் ஜாவாவிற்கான ஆதரவை ஏற்படுத்தியது. அத்துடன் தமது லைவ் சிகிரிப்டு என்ற மொழியை ஜாவாசிகிரிப்ட் (Java Script) என்று மாற்றிக்கொண்டனர். இதன் மூலமாக ஜாவா சிகிரிப்ட் மொழி பலரது கவனத்தில் பட்டது. இதைத்தவிர ஜாவாவிற்கும் யாவாசிகிரிப்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டிற்கும் தற்போதய நவீன உலாவிகளில் ஆதரவு வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

[தொகு] பயன்பாடு

  • னர்களிடம் இருந்து பெறுகின்ற தரவுகள் சரியா என்பதை உலாவியூடாகவே சரிபாத்துப் பின்னர் வழங்கியில் சேமிக்கும் வசதி.
  • உரையாடல் பெட்டி மற்றும் மேல் மீட்புப் பெட்டி ஜன்னல்களை உருவாக்குதல்.
  • பயனர்களின் சுட்டி அசைவுகளைகளிற்கு எடுத்துக் காட்டாக படங்களிற்கு மேலாக சுட்டி செல்லும் போது படங்களை மாற்றுதல்
  • யாவாசிகிரிப்டில் கம்பைலர்களை பயன்படுத்துவது இல்லை. நிரலை எழுதிய உடன் உலாவியில் சோதித்து பார்க்கலாம்.

[தொகு] யாவாசிகிரிப்டில் தமிழ்

Javascript Tamil Dialogbox.PNG

யாவாசிகிரிப்டில் தமிழைப் பயன்படுத்த தமிழ் செய்தியை ஒருங்குறியில் தட்டச்சுச் செய்து பின்னர் கோப்பை UTF-8 முறையில் சேமிக்க வேண்டும். உலாவிகள் அவற்றை தமிழில் காட்டும்.

<script type="text/javascript"> alert('சோதனைச் செய்தி') </script>

[தொகு] தொகுப்பிகள்

யே.எசை பலதரப்பட்ட தொகுப்பிகளில் தொகுக்கலாம். இணையத்தில் உடனடியாக யே.எசை பரிசோதிக்க யே.எசு பினை [1] பயன்படுத்தலாம்.

[தொகு] மொழி அமைப்பு

[தொகு] யே.எசை எச்.டி.எம்.எல் இல் இடல்

பொதுவாக யாவாசிகிரிப்டை எச்.டி.எம்.எலின் தலைப்பில் இடுவர். அதாவது பின்வருமாறு:

<html>
<head>
<script type="text/javascript"> 
யாவாசிகிரிப் இங்கே இடப்படும்....
</script>
</head>
<body></body></html>

ஆனால் பக்கம் தரவேறிய பின்னர்தான் யே.எசு தரவேறுனால் போது என்றால் அதை உடலில் இதே போன்று எச்.டி.எம்.எல் உடலிலும் போடலாம்.

யாவாசிகிரிப்டை ஒரு வெளி கோப்பாக இணைக்கலாம். தலைப்புகள் tags இடையே <script src="filename"> </script> என்று இணைக்கலாம்.


[தொகு] வெளியிணைப்புக்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்