யாபஹுவ இராசதானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Kingdom of Polonnaruwa
யாபஹுவ இராசதானி
යාපහුව රාජධානිය

கிபி 1272–கிபி 1300
தலைநகரம் யாபஹுவ
மொழி(கள்) சிங்களம்
சமயம் பௌத்தம்
அரசாங்கம் மன்னராட்சி
அதிபர்
 -  கிபி 1272-1284 முதலாம் புவனேகபாகு
 -  கிபி 1287-1292 மூன்றாம் பராக்கிரமபாகு
 -  கிபி 1292-1299 இரண்டாம் புவனேகபாகு
வரலாறு
 -  உருவாக்கம் கிபி 1272
 -  குலைவு கிபி 1300

யாபஹுவ இராசதானி என்பது இலங்கையின் தென்மேற்கு ஈர வலையத்தில் காணப்படும் யாபஹுவ மலையில் காணப்பட்ட இராசதானி. இக்குன்று கிட்டத்தட்ட 300 மீற்றர்கள் உயரமானது.

யாப்பகூவ கோட்டை

வரலாறு[தொகு]

யாபஹுவ இராசதானி தம்பதெனிய இராசதானிக்குப் பின்னர் இலங்கையில் உருவான ஒரு இராசதானி ஆகும். இது இராசதானியாகும் முன்னர் சுபா தளபதியால் ஓர் அரணாகப் பயன்பட்டது. பின்னர் 1273 இல் முதலாம் புவனேகபாகு மன்னனால் தலைநகரமாக மாற்றப்பட்டது. இவனாலேயே இங்கு மாளிகைகளும், யாப்பகூவ கோட்டை கட்டிடங்களும் கட்டப்பட்டன. புத்தரின் தந்தத்தாதுவை தம்பதெனியவில் இருந்து யாபஹுவக்குக் கொண்டு வரப்பட்டது. முதலாம் புவனேகபாகு மன்னனின் இறப்பின் பின்னர் பாண்டியத் தளபதியான மாறவர்மன் குலசேகரமால் இலங்கை ஆக்கிரமிக்கப்பட்டது. அவன் புத்தரின் தந்தத்தாதுவை பாண்டிய தேசத்திற்குக் கொண்டு சென்றான். இவ் இராசதானியின் இரண்டாவது அரசனாக வந்த மூன்றாம் பராக்கிரமபாகுவால் நட்பின் மூலமாக புத்தரின் தந்தத்தாது மீட்கப்பட்டது. பின்னர் இரண்டாம் புவனேகபாகு மன்னனாகி தலைநகரத்தை குருணாகலுக்கு மாற்றினான்.

Yapahuwa Lion.jpg
"http://ta.wikipedia.org/w/index.php?title=யாபஹுவ_இராசதானி&oldid=1542483" இருந்து மீள்விக்கப்பட்டது