யவன ராணி (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த கதையில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முற்கால சோழர் வரலாறு பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கரிகாலன் (திருமாவளவன்) வெண்ணி (கோவில்வெண்ணி தஞ்சை - திருவாரூர் சாலையில் உள்ள ஓர் சிற்றூர்) நகரில் சேர மன்னன் பெருன்சேரலாதனையும், பாண்டியனையும், பன்னிரு வேளிர் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த இருங்கோவேள் படையையும் அழித்து மன்னனாக முடி சூடியதை இப்புதினம் விவரிக்கின்றது.

கதையின் நாயகன் சோழ நாட்டின் படைத்தலைவனாக இருந்த இளஞ்செழியன். இளஞ்செழியன் தன் முறைப்பெண் பூவழகியின் மீது கொண்ட காதலையும், யவன ராணி (கிரேக்க ராணி) இளஞ்செழியன் மீது கொண்ட மாசறு காதலையும் விவரிகின்றது. தமிழகத்தில் (பூம்புகார் நகரில்) தமிழருக்கு யவனர்கள் சேவகம் செய்து வந்ததையும், பூம்புகாரின் சிறப்பையும், கடல் வாணிபத்தில் தமிழர் பங்கையும், இப்லாஸ் என்ற யவனன் இளஞ்செழியன் மீது கொண்ட விசுவாசத்தையும், தைப்ரீஸ் என்ற யவன கடற்படைத் தலைவன் போர் திறமைகளையும் இப்புதினம் விவரிக்கின்றது.

கதைச் சுருக்கம்[தொகு]

இளஞ்செழியன் சோழன் நாட்டின் படை தலைவன் , தனது சகோதரியின் மகள் பூவழகியிடம் காதல்கொள்கிறான் . ஆனால் பூவழகி சில காரணத்தால் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். ஓருநாள் யவன ராணியை கடற்கரையில் மயங்கிய நிலையிருந்து காப்பாற்றுகிறான். அவளை தொடர்ந்து வரும் யவன கடற்படை தலைவன் டைபிரீஸ் புகார் நகரத்தை கைபற்றி ராணியை முடிசூட வைக்க முயல்கிறான் . ராணி இளஞ்செழியன் மீது காதல் கொள்கிறாள் , புகாரை விட இளஞ்செழியனே முக்கியம் என்று முடிசுட வந்த வாய்ப்பை மறுக்கிறாள்.

இதனால் டைபிரீஸ் , இளஞ்செழியனை மயக்கமுறசெய்து யவன கப்பலில் அனுப்பி கொல்ல முயற்சி செய்கிறான். சாம்பிராணி நாட்டில் , அலீமாவின் உதவியால் தப்பித்து புகர் வந்தடைகிறான். இருங்கோவேள் சோழ நாட்டின் மன்னனாக இருப்பதால் , டைபீரீஸ் அவனுடன் சேர்ந்து புகாரை கைப்பற்ற மீண்டும் முயல்கிறான். இவை யாவையும் முறியடித்து , கரிகாலன் சோழ நாட்டின் மன்னனாக முடிசூடுகிறான். யவன நாட்டிற்கு துரோகம் செய்ததற்காக டைபீரீஸ் யவன ராணியை கொல்கிறான். யவனராணி பூவழகியை இளஞ்செழியனிடம் சேர்த்துவைத்து மறைகிறாள்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=யவன_ராணி_(புதினம்)&oldid=1608933" இருந்து மீள்விக்கப்பட்டது