யக் லேற்ரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜோன் கில்பேர்ட் லேட்டன் John Gilbert Layton |
|
|
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு ஜனவரி 25 2003 |
|
| முன்னவர் | அலெக்சா மாக்டோனோ |
|---|---|
| பதவியில் | |
| பதவியேற்பு 2004 |
|
| முன்னவர் | டெனிஸ் மில்ஸ் |
| அரசியல் கட்சி | கனடா புதிய ஜனநாயகக் கட்சி |
|
|
|
| பிறப்பு | சூலை 18, 1950 மொண்ட்றியால், கியூபெக், |
| தேசியம் | கனேடியர் |
| வாழ்க்கைத் துணை |
சலி ஹால்ஃபோர்ட் (1969-1983, முறிவு.) ஒலிவியா சாவ் (1988-present) |
| பிள்ளைகள் | சேரா, மைக் |
| இருப்பிடம் | டொரோண்டோ, ஒண்டாரியோ |
| பழைய மாணவர் | மகில் பல்கலைக்கழகம் யோர்க் பல்கலைக்கழகம் |
| தொழில் | அரசியல்வாதி |
| துறை | பேராசிரியர், activist |
| சமயம் | United Church of Canada |
யோன் கில்பேர்ட் யக் லேற்ரன் (தமிழக வழக்கு ஜாக் லேட்டன், Jack Layton, பிறப்பு: ஜூலை 18, 1950) கனடிய நடுவண் அரச நாடாளுமன்ற உறுப்பினர், 2003 இருந்து கனடா புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர். இவர் முன்னர் ரொறன்ரோ நகர அவை உறுப்பினராக இருந்தவர். நடுவண் நாடளுமன்றத்துக்கு சூன் 28, 2004 அன்று ரொறன்ரோ-டான்வோர்த் தொகுதிக்கு தேர்தெடுக்கப்பட்டார். இவரது மனைவி ஒலிவியா சாவ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இவர் இடது சாரி கொள்கை சார்புடையவர். அதே கொள்கை சார்புடைய கட்சியின் தலைமையை ஏற்ற அவர், அந்த கட்சியின் செல்வாக்கை பெருக்க மிகவும் உதவினார். இவரதும் இவரது கட்சியின் கவனம் அடித்தள, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், பெண்கள், குடிவரவாளர்கள், தன்னினச்சேற்கையாளர்கள், முதற்குடிகள் போன்றோரின் நலன் ஆகும்.