மொர்மனியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மொர்மனிசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மொர்மனியம் ஒரு கிறித்தவ சமயப் பிரிவு. மொர்மனியம் பின்னாள் புனிதர் இயக்கம் மற்றும் பின்னாள் புனிதர்களின் இயேசு கிறித்து திருச்சபை ஆகியவறின் சமய, பண்பாட்டு, கருத்து போக்குளைக் குறித்து நிற்கின்றது. மோர்மொன் நூல் இந்த சமயப் பிரிவின் மறைநூலாகும். இது பைபிளையும் தனது சமய நூற்களில் ஒன்றாக கருதுகிறது.
மொர்மனியம் ஏனைய கிறித்தவ சமயப் பிரிவுகளுடன் ஒரு சுமுகமான உறவு கொண்டதாக இல்லை. பல வேறுபாடான சமயக் கொள்கைகள் மொர்மனியத்திடம் உண்டு. சில வழிமுறைகளைப் பின்வற்றுவதன் மூலம் மனிதர்கள் கடவுளாக வரலாம் என்பது, பல மனவிகளை மணப்பது, சமய குற்றம் இழைத்தோரைக் கொல்வது போன்றவை இவற்றுள் அடங்கும்.