மொரியோரி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொரியோரி (Moriori) எனப்படுவோர் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நியூசிலாந்து தீவுக்கூட்டத்தின் கிழக்கே சதாம் தீவுகளில் குடியிருக்கும் பழங்குடியின மக்கள் ஆவர். இம்மக்கள் பொதுவாக அறப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவும், போரை விரும்பாதவர்களாகவும் வாழ்ந்து வந்தமையினால் தரனாக்கி மாவோரி ஆக்கிரமிப்பாளர்களினால் பெரும்பாலானோர் 1830களில் அழிக்கப்பட்டனர்.

வரலாறு[தொகு]

மொரியோரிகள் பண்பாட்டு ரீதியாக பொலினீசியர்கள் ஆவர். இவர்கள் சதாம் தீவுகளில் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப தனியானதொரு மொரியோரி பண்பாட்டை வளர்த்தெடுத்தார்கள். இவர்கள் பொலினேசியத் தீவுகளில் இருந்து நேரடியாக சதாம் தீவுகளில் குடியேறியவர்கள் என நம்பப்பட்டு வந்திருந்தாலும், பின்னர் வெளிவந்த ஆய்வுகள் 1500 ஆம் ஆண்டுக்கு முன்னர் நியூசிலாந்தில் இருந்து சதாம் தீவிகளில் குடியேறிய மாவோரி பொலினீசியர்களே மொரியோரிகளின் வம்சாவழிகள் எனத் தெரிவிக்கின்றன.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Clark, Ross (1994). "Moriori and Maori: The Linguistic Evidence". The Origins of the First New Zealanders. ஓக்லாந்து: Auckland University Press. பக். 123–135. 
  2. Solomon, Māui (updated 2-Sep-11). "Moriori". Te Ara - the Encyclopedia of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 2012-05-04. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. Howe, Kerry R. (updated 24-Sep-11). "Ideas of Māori origins". Te Ara - the Encyclopedia of New Zealand. Archived from the original on 2012-06-12. பார்க்கப்பட்ட நாள் 2012-05-04. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. King, Michael (2000 (Original edition 1989)). Moriori: A People Rediscovered. Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-14-010391-0. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரியோரி_மக்கள்&oldid=3569065" இலிருந்து மீள்விக்கப்பட்டது