முஃகர்ரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மொகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முஃகர்ரம் (முகரம், அரபி: محرم) என்பது இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும். இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவதாயினும் தடை செய்யப்பட்டுள்ளது. சில இசுலாமியர் இம்மாதத்தின் ஒன்பதாம் நாளிலும் பத்தாம் நாளிலும் உண்ணா நோன்பு இருத்தல் வழமையாகும். முஃகர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் (அரபு மொழியில் ஆசூரா) அன்று தியாகத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு அன்று சீஆ இசுலாமியர் உண்ணாதிருப்பர்.

முஃகர்ரம் பண்டிகை (Remembrance of Muharram) கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை சீஆக்களால் நினைவுகூரப்படுகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=முஃகர்ரம்&oldid=1342212" இருந்து மீள்விக்கப்பட்டது