மைசூர்ப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைசூர்ப் பல்கலைக்கழகம்

குறிக்கோள்: ‘அறிவுக்கு சமனானது எதுவுமில்லை’ மற்றும் ‘நான் எப்போதும் உண்மையாயிருப்பேன்’
நிறுவல்: 1916
வகை: பொதுத்துறை பல்கலைக்கழகம்
வேந்தர்: ராமேசுவர் தாகூர்
துணைவேந்தர்: பேராசிசிரியர் வி ஜீ தல்வார்
மாணவர்கள்: 4200
அமைவிடம்: மைசூர், கர்நாடகா, இந்தியா, இந்தியா
சார்பு: பல்கலைக்கழக மானியக் குழு
இணையத்தளம்: www.uni-mysore.ac.in [1]

மைசூர்ப் பல்கலைக்கழகம் இந்தியாவின் கர்நாடகத்தில் மைசூரில் உள்ள ஓர் பொதுப் பல்கலைக்கழகம் ஆகும்.

மைசூர்ப் பல்கலைக்கழகத்தின் கிரவ்போர்டு அரங்கம் - துணை வேந்தரின் அலுவலகம்

[தொகு] அறிமுகம்

மைசூர்ப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் ஆனது மைசூரில் அமைந்துள்ளது. இவ்வளாகத்தின் பெயர் மானச கங்கோத்திரி ஆகும். இதன் ஏனைய வளாகங்களில் அருகில் உள்ள ஹாசன், மாண்டியா மாவட்டங்களில் அமைந்துள்ளது. அண்ணளவாக 58, 000 மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றனர். 122 இணைக்கப்பட்ட கல்லூரிகளும் 49 அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுமையங்களும் இதனுடன் உள்ளன. இப்பல்கலைக்கழகமானது பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளுக்கான பாடதிட்டங்களை கலை, அறிவியலும் தொழில்நுட்பமும், சட்டம், கல்வி மற்றும் வர்த்தகம் தொடர்பான கற்கை நெறிகளில் வழங்குகின்றது.

[தொகு] வரலாறு

இது இந்தியாவின் ஆறாவது பழைய பல்கலைக்கழகமாகும். அத்துடன் கர்நாடகத்தில் உள்ள மிகப்பழைய பல்கலைக்கழகமும் இதுவேயாகும். இது 1916 ஆம் ஆண்டு மைசூர் மகாராஜா 6ஆம் கிருஷ்ணராஜ உடையாரால் டாக்டர் ரெட்டி மற்றும் தாமஸ் டென்ஹாம் அவர்களின் ஆலோசனையுடன் தொடங்கப்பட்டது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்