மைக்ரோசாப்ட் வர்ச்சுவல் பிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்ரோசாப்ட் வர்ச்சுவல் பிசி
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்நிறுவனம்.
அண்மை வெளியீடு2007 SP1 (விண்டோஸ்), 7.0.3 (மாக்) / 15 மே, 2008 (விண்டோஸ்), 14 ஆகஸ்ட், 2007 (Mac)
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோஸ், மாக் ஓஎஸ் எஸ் (deprecated), மாக் ஓஎஸ் (deprecated)
மென்பொருள் வகைமைEmulator, Virtual machine
உரிமம்Proprietary, ஆயினும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பாவிக்கலாம்.
இணையத்தளம்for Windows
for Mac

ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களை ஒரே கணினியில் இயக்கிப் பார்பதற்கு மைக்ரோசாப்ட் வர்ச்சுவல் பிசி (இலங்கை வழக்கு: மைக்ரோசாப்ட் வேர்சுவல் பிசி) உதவுகின்றது.

அபிநயிக்கும் வன்பொருட்கள்[தொகு]

  • 32பிட் இண்டல் பெண்டியம் II செயலி (எனினும் விண்டோஸ் பணிச்சூழலில் அதில் பொருத்தப்பட்டிருக்கும் செயலியை அபிநயிக்கும்) இதில் இண்டெல் 440பிஸ் மதர்போட்டையும் பிரதிபலிக்கும்.
  • 16 மெகாபைட் வரை மாற்றக்கூடிய வீடியோ அட்டை.
  • அமெரிக்கன் மெகாரெண்ட்ஸ் பயோஸ்
  • கிரியேட்டிவ் சன்பிளாஸ்டர் ஒலி அட்டை.

வர்சுவல் பிசி வன்வட்டானது வர்ச்சுவல் பிசிக்கும் வர்ச்சுவல் பிசி சர்வருக்கும் பொதுவானதாகும்.

ஆதரிக்கும் வழங்கி, விருந்தினர் இயங்குதளங்கள்[தொகு]

வழங்கி இயங்குதளங்கள் வர்ச்சுவல் பிசி 2007 அதிகாரப்பூர்வமாகப் பின்வரும் இயங்குதளங்களை ஆதரிக்கின்றது.

  • விண்டோஸ் விஸ்டா (விண்டோஸ் விஸ்டா அல்டிமேட், எண்டபிறைஸ், பிஸ்னஸ் எடிசன், ஐரோப்பாவிற்கான பிஸ்னஸ் எடிசன் என் ஆகியவற்றின் 32 பிட் மற்றும் 64பிட் பதிப்புகளை ஆதரிக்கின்றது)எனினும் விண்டோஸ் விஸ்டா ஸ்டாட்டர் எடிசன், ஐரோப்பிய விஸ்டா ஹோம் என் பதிப்புக்களிற்கு ஆதரவு கிடையாது.
  • விண்டோஸ் எக்ஸ்பி புரொபெஷனல்
  • விண்டோஸ் சேர்வர் 2003.