மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் தரவுத் தள எந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் தரவுத்தள எந்திரம் மைக்ரோசாப்டினால் விருத்தி செய்யப்பட்ட ஓர் சார் தரவுத்தளமாகும். இது மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் 7 அல்லது 2000 வசதிகுறைக்கப்பட்ட பதிப்பாகும் எனினும் இது தன்னை சீக்குவல் சர்வர் 2000 குடும்பமாகவே அடையாளப்படுத்திக் கொள்ளும். இது வணிக நோக்கல்லாத பணிகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வணிகப் பணிகளுக்கும் இலவசமானதாகும். மைக்ரோசாப்டின் தொழிற்கல்விக் கண்காட்சியில் மே 1999 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. [1] இது விருத்தியாளர்களுக்கான மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2000 பதிப்பான “ஆபிஸ் 2000 டெவலப்பர் எடிசனுடன்” உள்ளிணைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 2005 இல் வந்த விரைவான சீக்குவல் சர்வர் எனப்பொருள்படும் சீக்குவல் சர்வர் எக்ஸ்பிரஸ் எடிசன் இதனை மாற்றீடு செய்தது. இதற்கான வணிக ஆதரவு 8 ஏப்ரல் 2008 உடன் முடிவடைந்தது.

உசாத்துணைகள்[தொகு]

  1. Microsoft Announces Availability of MSDE For Developers Using Visual Studio அணுகப்பட்டது 28 மே 2010