மைக்ரோசாப்ட் எக்ஸ்செல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விண்டோஸ் விஸ்டாவில் இயங்கும் மைக்ரோசாப்ட் எக்ஸெல் 2007 இன் திரைக்காட்சி. |
|
| பராமரிப்பாளர்: | மைக்ரோசாப்ட் |
| பிந்திய பதிப்பு: | 12.0.6300.5000 (2007) / மார்ச், 2008 |
| இயங்கு தளம்: | மைக்ரோசாப்ட் விண்டோஸ் |
| வகை: | விரிதாள் |
| உரிமை: | Proprietary EULA |
| மைக்ரோசாப்ட் ஆபிஸ் | |
மாக் ஓஸ் X 10.5 இல் இயங்கும் மைக்ரோசாப்ட் எக்ஸெல் 2008 |
|
| பராமரிப்பாளர்: | மைக்ரோசாப்ட் |
| பிந்திய பதிப்பு: | 12.0.0 (2008) / வார்ப்புரு:Release date and age |
| இயங்கு தளம்: | Mac OS X |
| வகை: | விரிதாள் |
| உரிமை: | Proprietary EULA |
| Microsoft Excel: Mac 2008 | |
மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் சுருக்கமாக அறியப்படும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் எக்ஸ்செல் மைக்ரோசாப்ட்டினால் உருவாக்கப்பட்டு விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மாக்கிண்டோஷ் கணினிகளுக்காக விநியோகிக்கப்படும் அலுவலகப்பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளாகும். இதன் பிரதான வசதிகளாவன வெளிப்படையான இலகுவான இடைமுகம் வினைத்திறனாக கணித்தல்களை மேற்கொள்ளல், வரைபடங்களை உருவாக்குதல் மற்றும் தொடர்சியான சந்தைப் படுத்தும் முயற்சிகள் இன்றுவரை பிரபலான மைக்ரோசாப்ட் மென்பொருளாக விளங்கவைத்தது. 1993 இல் இருந்து லோட்டஸ் சாப்ட்வேர் (இன்றைய ஐபிஎம் இன் ஓர் பகுதி) இன் லோட்டஸ் 1-2-3 மென்பொருளை மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளோடு சந்தைப் படுத்தி வெற்றிகொண்டது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
ஆரம்பத்தில் 1982 இல் CP/M இயங்குதளங்களில் மல்டிபிளான் என்ற விரிதாள் மென்பொருள் தயாரிக்கப்ட்டது டாஸ் இயங்குதளங்களில் லோட்டஸ் 1-2-3 இன் கடுமையான போட்டிகாரணமாக இது பிரபலம் அடையவில்லை. 1985 இல் விண்டோஸ் இயங்குதளத்திற்கான எக்ஸ்செல் மென்பொருள் வெளிவிடப்பட்டது. இந்தப் பெயரை லோட்டஸ் 1-2-3 இல் உள்ளதனைத்தும் மற்றும் மேலதிகமான வேலையும் செய்யலாம் என்று சந்தைப் படுத்தினர். போர்லாண்ட் நிறுவனம் போலவே விண்டோஸ் இயங்குதளத்திற்கான பதிப்பை வெளிவிடுவதில் ஏற்பட்ட காலதாமதம் எக்ஸ்செல்லின் வெற்றியைத் தீர்மானித்தது. 1998 எக்ஸெல், லோட்டஸ் 1-2-3 மென்பொருளை வெற்றிக்கொண்டது. இதன் தற்போதைய பதிப்பானது எக்ஸெல் 2003 தவிர எக்ஸெல் 2007, ஜனவரி 2007 இல் வெளிவர இருக்கின்றது. இதன் தற்போதைய போட்டியாளர்களாக கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரட்ஷீட்ஸ் மற்றும் ஒப்பிண் ஆபிஸ் ஆகியவை விளங்குகின்றன. லினக்ஸ் இயங்குதளத்தில் ஒப்பிண் ஆபிஸ் மென்பொருளே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது.
1993 இல் இருந்து பிரயோகங்களுக்கான விஷ்வல் பேஸிக் ஒருங்கிணைக்கப்பட்டது. இதனூடாக வடிவமைக்கப்டும் மக்ரோக்களே மக்ரோ வைரஸ் பரவலிற்கும் காரணமாக அமைந்தது.
மைக்ரோபட் எக்ஸெல் ஐகானில் XL என்ற எழுத்துக் காணப்படும்.
[தொகு] ஆரம்பித்தல்
எக்செல் ஐ ஆரம்பிக்க Start -> Run -> Excel என்று தட்டச்சுச் செய்தால் ஆரம்பிக்கும்.
[தொகு] வசதிகள்
- கணித்தல்களைச் செய்யலாம் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் போன்றவற்றிற்கு எழிய முறையிலும் மற்றும் அட்சரகணிதக் கோவைகளுக்கு சார்புகளை எழுதித் தீர்வுகாண இயலும்)
- உள்ளீடு செய்யும் தரவுகள் ஓர் வீச்சுக்குள் உள்ளதா என்பதைச் சரிபார்த்தே அனுமதிக்கும் வசதி. அத்துடன் அவ்வாறு வீச்சுக்குள் அமையாத தரவுகளை உள்ளிட முயலும் போதான பிழைச் செய்தியையும் விரும்பியவாறு வடிவமைக்கக்கூடியதான தமிழ் ஒருங்குறியூடான ஆதரவு.
- தரவுகளை விரும்பியவாறு வரிசைப்படுத்த இயலுவதோடு தேவையான தரவை மாத்திரம் பார்க்கும் லிஸ்ட் வசதி.
- தரவுகளைப் பொறுத்துத் தானாகவே நிறமூட்டும் நிபந்தனைகளுடன் தரவைக் காட்டும் Conditional Formatting வசதி.
- வரைபுகளை விரும்பியடி தேர்ந்தெடுக்க முடிவதோடு இவை யாவும் இயங்கு நிலையில் தரவுகள் மாறும்போது மாற்றமடையக்கூடியன.
- ஓர் வரைதாளில் இருந்து இன்னேர் வரைதாளில் உள்ள தரவைப் பெற்றுக் கொள்ளும் வசதி.
- மீயிணைப்பு என்னும் இணையத்தளங்களிற்கும் மின்னஞ்சல் முகவரிகளுக்குமான இணைப்பை ஏற்படுத்தும் வசதி.
[தொகு] தமிழ் மற்றும் இந்திய மொழிகளின் ஆதரவு
மைக்ரோசாப்ட் ஆபிஸ் XP பதிப்பில் இருந்து தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்கின்றது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2000 விண்டோஸ் 2000 வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்ததால் இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்காது. இவை ஆங்கிலம் போலவே தமிழிலும் Sort பண்ணக் கூடியவையே. கண்ட்ரோல் பனலூடாக மொழி மற்றும் பிராந்திய தேர்வுகளூடாக மொழியை தமிழாக மாற்றுவதன் மூலம் நாணயக் குறியை டாலரில் இருந்து ரூபாயிற்கு மாற்றறுவதுடன் திகதியையும் தமிழாக மாற்றவியலும்.
குறிப்பு: Sorting தமிழிலோ ஏனைய இந்திய மொழிகளிலோ ஒருங்குறியில் இருந்தால் மாத்திரமே செய்யலாம். தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை மற்றும் பாமினி போன்ற எழுத்துக்களில் செய்யவியலாது.
[தொகு] இவறையும் பார்க்க
- மைக்ரோசாப்ட் எக்ஸ்செல்
- மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் பயிற்சி
- தமிழ் மூலம் எக்செல் - றமணன் - குவிக்ரெக் அக்கடமி கொழும்பு, இலங்கை

