மேற்கு மாம்பலம்
மேற்கு மாம்பலம் அல்லது பழைய மாம்பலம்தமிழகத் தலைநகர் சென்னையின் தென்பகுதியில் தி.நகருக்கு மேற்கே உள்ள ஓர் குடியிருப்புப் பகுதியாகும். சென்னையின் பழமையான குடியிருப்புகளில் இது ஒன்றாகும்.இது சென்னை புறநகர் இருப்புப்பாதையின் தெற்கு வழியில் உள்ள மாம்பலம் தொடருந்து நிலையத்தின் மேற்கே உள்ளது.சென்னையின் பிற பகுதிகளுடன் தொடருந்து மற்றும் மாநகரப் பேருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கோதண்டராம சுவாமி கோவிலும் காசி விசுவநாதர் ஆலயமும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. தவிர, சத்தியநாராயணா கோவில், அயோத்திய மண்டபம் ஆகியவையும் புகழ் பெற்றவை.
இங்குள்ள சில பள்ளிகள்:அகோபில மட ஓரியண்டல் பள்ளி,அஞ்சுகம் இடைநிலைப் பள்ளி,செயகோபால் கரோடியா இந்து வித்யாலயா,ஸ்ரீ பி.எஸ்.மூதா பெண்கள் பள்ளி,எஸ்.ஆர்.எம் நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் மற்றும் ஸ்ரீ நாராயணா மிசன்.
மாம்பலம் என்பது மாமல்லம் என்பதின் மருவிய பெயர். பிறகு மாம்பலம் ஜமீன் மாம்பலம் பழைய மாம்பலம்,மேற்கு மாம்பலம் என்று மாறியது.தி நகர் புது மாம்பலம் எ!
உசாத்துணை [தொகு]
- அசோகமித்திரன் (மார்ச் 7, 2009). "மேன்மையான மேற்கு மாம்பலம்". சென்னை ஆன்லைன்.