மேலைக் கங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மேற்கு கங்க அரசமரபு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேலைக் கங்க அரசமரபு
ಪಶ್ಚಿಮ ಗಂಗ ಸಂಸ್ಥಾನ
பேரரசு
(350 வரை பல்லவர்களுக்கு உட்பட்ட சிற்றரசு)

350–1000
மேலைக் கங்கர்களின் நிலப்பகுதி
தலைநகரம் கோலார்
தலக்காடு
மொழி(கள்) கன்னடம்
சமசுகிருதம்
சமயம் சமணம்
இந்து
அரசாங்கம் முடியாட்சி
மகாராஜா
 -  350–370 கொங்கணிவர்மா மகாதேவா
 -  986–999 Rachamalla V
வரலாறு
 -  கங்க ஆவணங்கள் கிடைத்த காலம் 400
 -  உருவாக்கம் 350
 -  குலைவு 1000

மேலைக் கங்கர்கள் (கன்னடம்: ಪಶ್ಚಿಮ ಗಂಗ ಸಂಸ್ಥಾನ) பழங்கால கருநாடகத்தில் இருந்த ஓர் சிறப்பு வாய்ந்த அரசமரபாகும். இது கிபி 350 - 1000 வரை ஆட்சியில் இருந்தது. இதை மேலைக் கங்கர்களின் அரசமரபு என்றும் கூறுவர். கலிங்கத்தை ஆண்ட (தற்கால ஒடிசா) கீழை கங்கர்களிடம் (கிழக்கு கங்கர்கள்) இருந்து வேறுபடுத்துவதற்காக இவர்கள் மேலைக் கங்கர்கள் எனப்படுகின்றனர். பல்லவ பேரரசின் வலு குன்றிய நேரத்தில் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்கள் விடுதலை வேண்டும் என புரட்சி செய்தனர். அக்கால கட்டத்தில் இவர்கள் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. சமுத்திர குப்தரின் படையெடுப்புக்கும் இக்கால கட்டத்தின் குழப்பமான நிலையே காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கிபி 350லிருந்து 550 வரை இவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தார்கள். முதலில் கோலாரிலும் பின்னர் தலக்காட்டிலும் தங்கள் தலைநகரை அமைத்தார்கள்.

பாதமி சாளுக்கியர்களின் எழுச்சிக்குப்பின் அவர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக காஞ்சி பல்லவர்களுடன் மோதினர். சாளுக்கியர்கள் வழுவிழந்து இராஷ்ரகூடர்கள் ஆதிக்கம் கிபி 753ல் தக்காணத்தில் ஏற்பட்டவுடன் தன்னாட்சிக்காக நூறு ஆண்டுகள் போராடி பின் இராஷ்ரகூடர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக தஞ்சை சோழர்களை எதிர்த்தார்கள். கிபி 10த்தில் துங்கபத்ரா ஆற்றின் வடக்கில் இராஷ்ரகூடர்களை மேலைக் சாளுக்கியர்களும் சோழர்களும் இணைந்து முறியடித்தனர். சோழர்களால் மேலைக் கங்கர்கள் தோற்கடிக்கப்பட்டவுடன் கங்கர்களின் 1000 ஆண்டு செல்வாக்கு அப்பகுதியில் முடிவுக்கு வந்தது.

பரப்பளவில் சிறிய நாடாக இருந்தபோதிலும் தற்போதைய தென் கருநாடகத்துக்கு பண்பாடு, இலக்கியம் போன்றவற்றில் இவ்வரசின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாகும். மேலைக் கங்கர்கள் எல்லா சமயங்களையும் ஆதரித்தார்கள். சமண சமயத்தை பெரிதும் ஆதரித்தார்கள். சரவணபெலகுளா, பஞ்சகுட்ட பாசதி போன்றவை இவர்கள் காலத்தில் உருவானதாகும். இவர்கள் கூத்துகலையை பெரிதும் ஆதரித்தார்கள். இது கன்னட, சமசுகிருத இலக்கியங்கள் வளர துணைபுரிந்தது. கிபி 978ல் சவுண்டரயாவின் சவுண்டரயாவின் புராணா என்பது இவர்கள் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட பெரும் படைப்பாகும். யானைகள் மேலாண்மை, சமயம் உட்பட பல நூல்கள் இயற்றப்பட்டன.


மேலைக் கங்கர்கள் கொங்கு நாட்டின் ஒரு சிறு பகுதியை ஆட்சி செய்த குருநில மன்னர்கள் ஆவர். வாதாபி மேலைக்ச்சாளுக்கியர்கள் சீர்குலைந்து, சிதைந்து போகவே கங்க வம்சத்து சிவமாறன் என்ற இளவரசன் கொங்கல் நாடு 8,000 என்ற பகுதியின் சிற்றரசனாக முடிசூட்டிக்கொண்டு கி. பி.755 முதல் கி. பி. 765 வரை ஆட்சிசெய்தான். இவனே கங்க வம்சத்து முதல் அரசன், இவனை கொங்கணி மகாராஜன் என பிருதுகள் சாசனம் விவரிக்கிறது.[1] வாதாபி மேலைக்ச்சாளுக்கியர்கள் ஆட்சிப் பகுதியை ஆட்சி செய்ததால் மேலைக் கங்கர்கள் ஆயினர்.

ஸ்ரீ புருசன் முத்தரசன்[தொகு]

சிவமாறன்- கொங்கணி மகாராஜன்இவனுக்குப் பிறகு ஸ்ரீ புருசன் முத்தரசன் பட்டத்திற்கு வந்தான். இவன் முதலில் குருநில மன்னனாக இருந்து பின் தன்னை சுதந்திர அரசனாக அறிவித்துக்கொண்டான். இவனது ஆட்சிக்காலம் கி. பி. 764 முதல் கி. பி.805 வரை என்றும், இவனது தலைநகர்- மணலால் புதையுண்ட தலைக்காடு-(கர்நாடக மாநிலம்)என்றும், இவனது நாட்டை 8,000த்திலிருந்து 96,000 (96,000 கிராமங்கள்) ஆக ஆக்கிக்கொண்டான் என மகாராஜாதிராஜ பரமேஸ்வர பிருதுகள் சாசனம் விவரிக்கிறது.[1]

சான்றாவணம்[தொகு]

  1. 1.0 1.1 கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-126)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-அண்ணாமலைப் பல்கலைக் கழகம்-1954-

மேலும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மேலைக்_கங்கர்&oldid=1683134" இருந்து மீள்விக்கப்பட்டது