மேரி கென்னத் கெல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அருட்சகோதரி மேரி கென்னத் கெல்லர் (1914?–1985) கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார்.[1][2] 1965ஆம் ஆண்டு விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் "Inductive Inference on Computer Generated Patterns." என்னும் தலைப்பின் கீழ் செய்த ஆய்வுக்காய் முனைவர் பட்டம் பெற்றார்.[3]

அன்பின் சகோதரிகள் என்னும் கத்தோலிக்க துறவற சபையில் இணைந்து 1940ஆம் ஆண்டு தனது துறவற வாக்குறிதியினை அளித்தார்.[4] அதன் பின்னர் கணித அறிவியலில் இளங்கலையும் (B.S. in Mathematics), மேலும் கணிதம் மற்றும் இயற்பியலில் முதுகலையும் (M.S. in Mathematics and Physics) தேபால் பால்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார்.[4] டார்த்மவுன்ட் கல்லூரியில் பயிலும் போது, அக்காலத்தில் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியதாகக் கருதப்பட்ட, கணினி துறையில் பேசிக் நிரலாக்க மொழியினை உருவாக்க ஊதவினார்.[4]

1965ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற பின், ஐயோவா கிளார்க் கல்லூரியில் கணினி அறிவியல் துறையினை நிறுவி அதன் இயக்குனராக இருபது ஆண்டுகளுக்கு பதவி வகித்தார்.[5] இந்த கிளார்க் கல்லூரியில் இப்போது கெல்லர் கணினி மையம் மற்றும் தகவல் சேவை மையம், இவர் பெயரால் நிறுவப்பட்டு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கணினி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பயிர்ச்சி அளிக்கின்றது.[6] இக்கல்லூரியில் இவரின் பெயர் கொண்டு, "Mary Kenneth Keller Computer Science Scholarship" கல்வி ஊக்கத்தொகை மாணாக்கருக்கு வழங்கப்படுகின்றது.[7]

கணினி அறிவியல் பற்றி இவர் நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_கென்னத்_கெல்லர்&oldid=1638811" இருந்து மீள்விக்கப்பட்டது