மேட்டூர் அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேட்டூர் அனல் மின் நிலையம் (Mettur Thermal Power Station) தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திலுள்ள அனல் மின் நிலையம் ஆகும். இது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பகிர்வுப்பிரிவான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 1987 முதல் இந்நிலையம் செயல்பட்டுக்கொண்டுவருகிறது. மகாநதி நிலக்கரிப்புலம் வரையறுக்கப்பட்டதின் தல்சர் மற்றும் ஐ. பி. பள்ளத்தாக்குகளில் இருந்தும், கிழக்கு நிலக்கரிப்புலம் வரையறுக்கப்பட்டதின் இராணிகஞ்ச் மற்றும் முக்மாவிலிருந்தும் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகம் வந்து அங்கிருந்து தொடருந்து மூலமாக மேட்டூர் கொண்டுவரப்படுகிறது.[1]. மொத்தம் உள்ள நான்கு கலன்கள் மூலம் 820 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இருப்பிடம்[தொகு]

இந்நிலையம் மேட்டூர் அணை அருகே 11°46′19″N 77°48′49″E / 11.77194°N 77.81361°E / 11.77194; 77.81361 (Mettur Thermal Power Station) பூகோள ஆயத்தில் உள்ளது.

கலன்கள்[தொகு]

மொத்தம் நான்கு அனல் மின் உற்பத்தி செய்யும் கலன்கள் உள்ளன.

தொகுதி நிறுவப்பட்ட செலவு-ரூபாய் (கோடியில்) செயற்படும் நாட்கள் நிறுவப்பட்ட திறன் (மெகாவாற்று) ஆரம்பிக்கப்பட்ட திகதி
1 384.30 227 210 நாட்கள் சனவரி 7, 1987
2 384.30 205 நாட்கள் 210 திசம்பர் 1, 1987
3 351.76 272 நாட்கள் 210 மார்ச்சு 22, 1989
4 351.76 311 நாட்கள் 210 மார்ச்சு 27, 1990

மேற்கோள்கள்[தொகு]

  1. அனல்மின் நிலையம். "tangedco" (PDF). பார்க்கப்பட்ட நாள் 11 May 2012.