மெய்நிகர் யாழ்ப்பாணம்
மெய்நிகர் யாழ்ப்பாணம் |
|
| உரலி | www.jaffna360.com |
|---|---|
| தளத்தின் வகை | அகலப் பரப்புக் காட்சி |
| பதிவு செய்தல் | இல்லை |
| கிடைக்கும் மொழி(கள்) | தமிழ், ஆங்கிலம் |
| வெளியீடு | பெப்ரவரி 25, 2012 |
| அலெக்சா நிலை | 1310231 |
| தற்போதைய நிலை | இயங்குநிலை |
மெய்நிகர் யாழ்ப்பாணம் (Jaffna 360) என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடங்களை அகலப் பரப்புக் காட்சிகளாகத் தரும் இணையத்தளம் ஆகும்.[1] இது யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண நகரம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகிய இடங்களிலுள்ள கோயில்கள், பாடசாலைகள், வரலாற்று முக்கியத்துவமுள்ள இடங்கள், தேவாலயங்கள், இயற்கைக் காட்சிகள், பல்கலைக்கழகங்கள், கட்டடக் கலை, திருவிழாக்கள், இடங்கள் முதலியவற்றின் அகலப் பரப்புக் காட்சிகளை வழங்குகின்றது.[2]
வசதிகள்[தொகு]
அகலப் பரப்புக் காட்சிகளைத் தேசப்படத்திலிருந்து தெரிவு செய்யக்கூடிய வசதியை இத்தளம் வழங்குகின்றது. இதற்காக இத்தளம் கூகுள் நிலப்படங்களைப் பயன்படுத்துகின்றது. வரைபடம், செயற்கைக்கோள் என்னும் இரு தெரிவுகளினூடாகத் தேசப்படத்தின் வகையையும் மாற்ற முடிகின்றது.[3]
மேலும் விரைவில் வெளிவரவுள்ள அகலப் பரப்புக் காட்சிகளின் விபரங்களும் இத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.[4] இணையத்தளத்திலேயே மெய்நிகர் படப்பிடிப்பிற்கான படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் ஓரிடத்தைப் படம்பிடிக்குமாறு வேண்டுகோளும் விடுக்கலாம்.