மென்டவாய் தீவுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மென்டவாய் தீவுகள் Mentawai Islands Regency கெப்புலாவன் மென்டவாய் |
|
|---|---|
| அமைவு: | |
| நாடு | |
| மாகாணம் | மேற்கு சுமாத்திரா |
| தலைநகர் | துவா பெஜட் |
| பரப்பளவு | |
| - நகரம் | 6,011.35 கிமீ² (2,321 ச. மைல்) |
| மக்கள் தொகை (2000) | |
| - நகரம் | 38,300 |
| நேர வலயம் | இந்தோனேசிய நேரம் (ஒ.ச.நே.+7) |
மென்டவாய் தீவுகள் (Mentawai Islands) இந்தோனேசியாவில் சுமாத்திராவின் மேற்கில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஆகும். இதில் கிட்டத்தட்ட 70 தீவுகளும் சிறுதீவுகளும் உள்ளன. சிபெருட் (4,030 கிமீ²) என்பது இதில் உள்ள பெரிய தீவாகும். சிப்பூரா, வடக்கு பகாய், தெற்கு பகாய் ஆகியன இங்குள்ள ஏனைய முக்கிய தீவுகள். இத்தீவுகள் சுமாத்திராக் கரையில் இருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் மென்டவாய் நீரிணைக்குக் குறுக்கே அமைந்துள்ளது. இத்தீவுகளின் பழங்குடி மக்கள் மென்டவாய் மக்கள் என அழைக்கப்படுகின்றனர். சுற்றுலாத் துறைக்கு, குறிப்பாக கடலலை சறுக்கல் விளையாட்டுக்கு இத்தீவுகள் பேர் பெற்றது.