மூலமறியா தான்தோன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலமறியா தான்தோன்றி (Idiopathic) என்ற பெயரடை மருத்துவத்தில் முதன்மையாக தானாகவே வெளிப்பட்ட அல்லது ஓர் தெளிவற்ற அல்லது அறியாத காரணி எனக் குறிப்பிடப் பயன்டுத்தப்படுகிறது. இதன் ஆங்கிலமூலம் இடியோதிக் என்ற சொல் கிரேக்க மொழியில் இடியோசு (ἴδιος) தானே என்றும் + பாதோசு (πάθος) துன்பம் என்றும்இணைந்து தானே தோன்றும் நோய் எனப் பொருள் தருகிறது. இது நோய் வகைப்பாட்டியலில் வரையறுக்கப்படும் ஓர் கலைச்சொல்லாகும். சில மருத்துவச் சூழல்களில் நோய்க்கான ஒருசில காரணங்கள் அறியப்பட்டிருக்கலாம்; இருப்பினும் குறிப்பிட்ட விழுக்காடு நோயாளிகளில் நோய்க்காரணம் உடனடியாக அறியப்படாமலோ வரையறுக்கப்படாமலோ இருக்கலாம். இத்தகைய நேரங்களில், மூல காரணம் அறியப்படாது மூலமறியா நோய்த்தன்மை எனப்படும்.

சில நோய்த்தன்மைகளுக்கு கூடுதல் விழுக்காடு நேரங்களில் மருத்துவ சமூகத்தால் மூலகாரணம் அறியப்படாமல் உள்ளது ;[1] வேறுசில நோய்த்தன்மைகளுக்கு மூலமறியா தான்தோன்றி விழுக்காடு குறைவாக உள்ளது.[2] மருத்துவ அறிவியல் ஆய்வுகள் ஒரு குறிப்பிட்ட நோய் அல்லது நோய்த்தன்மை குறித்து மேம்படும்போது மூலகாரணங்கள் அறியப்பட்டு மூலமறியா தான்தோன்றி விழுக்காடு குறைந்து வரும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Daskalakis N, Winn M (2006). "Focal and segmental glomerulosclerosis". Cell Mol Life Sci 63 (21): 2506–11. doi:10.1007/s00018-006-6171-y. பப்மெட்:16952054. https://archive.org/details/sim_cellular-and-molecular-life-sciences_2006-11_63_21/page/2506. 
  2. "Medical Encyclopedia: Idiopathic pulmonary fibrosis". MedlinePlus. பார்க்கப்பட்ட நாள் 2007-02-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலமறியா_தான்தோன்றி&oldid=3520713" இலிருந்து மீள்விக்கப்பட்டது